பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

253



பொது நூலகங்கட்கு இதழ்கள்
அனுப்பும் சட்டம்:

பத்திரிகையோ, புத்தகங்களோ அச்சானபிறகு, அவற்றைப் பொது நூலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று 1954-ம் ஆண்டு இதழ்கள் சட்டம் கூறுகின்றது. இந்த சட்டத்திற்கேற்ப ஒருவர் வெளியிடுகின்ற புத்தகங்கள், பத்திரிகைகள் பிரதிகள் ஒவ்வொன்றையும் இலவசமாகக் கீழ்க் கண்ட தேசிய பொது நூலகங்களுக்கு அவசியம் அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரிகள்:

1. இணை இயக்குநர், நூல்கள் பதிவாளர், தலைமைச் செயலகம், சென்னை-600009.

2. பொது நூலக இயக்குநர், பொது நூலக இயக்ககம், அண்ணாசாலை, சென்னை-600 002.

3. பொது நூலகர், கன்னிமாரா நூலகம், சென்னை-600008.

4. தேசிய நூலகம், பெலவதெரா, கொல்கத்தா-7

5. மத்திய நூலகம், டவுன் ஹால், மும்பை-23.

6. தேசிய மத்திய நூலகம், புதுதில்லி

மேற்கண்ட நூலகங்களுக்குத் தவறாமல் புதிய வெளியீடுகளின் பிரதிகள் ஒன்றை அனுப்பவேண்டும் என்று அரசு சட்டம் அறிவிக்கின்றது.

இ.பி.கோ. குற்றவியல் சட்டங்கள்:
(Indian Penal Code-1867)

கி.பி.1867-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்தக் குற்றவியல் சட்டம், தடுக்கப்படவேண்டியவற்றை அச்சிடுவதும், வெளியிடுவதும், புழக்கத்தில் விடுவதும் குற்றம் என்று இந்த சட்டம் அறிவிக்கின்றது.

இந்த சட்டத்தில், நாட்டின்மீது வெறுப்பை வளர்ப்பதைத் தேசத் துரோகம் என்று 124A, பிரிவு கூறுகின்றது. மதம், இனம்,