பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

பத்திரிக்கைகளைப் பாதுகாக்கும் ஃபெரோஸ் காந்தி சட்டம்!


பிறப்பிடம், வாழிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுவினரிடம் வெறுப்பை வளர்ப்பதும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்று 153A பிரிவு கூறுகின்றது.

குற்றவியல் சட்டத்தின்படி, பத்திரிகைகளோ, ஒரு புத்தகமோ தடை செய்யப்படவேண்டிய உட்கருத்துக்களைக் கொண்டிருப்பதாக மாநில அரசு கருதுமானால், அதைக் குற்றவியல் வழக்கு Criminal Procedure Code முறையின் 95-ம் பிரிவுப்படி அச்சிட்ட அல்லது வெளியிட்ட பத்திரிகைகள், புத்தகங்கள் பிரதிகளைத் தடை செய்து பறிமுதல் செய்யும் அதிகாரம் உடையது - இந்தக் குற்றவியல் சட்ட வகைகள்.

மருந்துகள், தந்திர - திவாரணங்கள் சட்டம்:
(The Drugs and Magic Remedies Act - 1954)

மந்திர, தந்திரங்களால் வாழ்க்கைக்குரிய நலன்கள், வசதிகள் கிடைப்பதாக ஒரு சிலர் பத்திரிகைகளிலேயும், சுவரொட்டிகளிலேயும் விளம்பரங்கள் செய்து மக்களை ஏமாற்றிப் பணம் பறித்துவரும் மருந்து, மந்திர, தாயத்து, மோதிர விற்பனையாளர்களது விற்பனைகளைத் தடுப்பதற்காகவும், ஆட்சேபனைக்குரிய விளம்பரங்களைக் கட்டுப்படுத்தவும் இந்த சட்டம் 1954-ம் ஆண்டில் அரசால் கொண்டுவரப்பட்டது.

பரிசுப் போட்டித் தடைச் சட்டம் - 1955
(The Prize Competition Act - 1955)

இந்தச் சட்டம், பத்திரிகைகள் குறுக்கெழுத்துப் போட்டிகள் நடத்தினால், அதற்குப் பரிசு ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என்று இந்த சட்டம் தடைபடுத்துகிறது. அதே நேரத்தில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் நடைபெறும் பரிசுப் போட்டியை வரம்புக்கு மீறி விளம்பரம் செய்வதையும் இந்தச் சட்டம் தடுக்கின்றது.