பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

257


வேண்டிய சூழ்நிலையை தேசிய ஒற்றுமை மன்றத்திற்கு வற்புறுத்தியது. அதனால், 1965-ஆம் ஆண்டில் பத்திரிகை மன்ற சட்டம் Press Council Act நிறைவேறிற்று; இந்தியப் பத்திரிகை மன்றம் 4.7.1966ல் அமைக்கப்பட்டது. அதன் தலைவர் ஜேர்.ஆர். மல்ஹோத்ரா என்பவர் ஆவார்.

இந்திய நாட்டில் நெருக்கடி நிலையை 1975-ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் அமலாக்கியபோது, 8.12.1975 அன்று ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். 10.1.1976 முதல் பத்திரிகை மன்றம் கலைக்கப்பட்டது. அந்தச் சட்டத்திற்கு The Press Council Ropeal Act - 1976 என்று பெயர்.

ஏன் பத்திரிகை மன்றத்தைக் குடியரசுத் தலைவர் கலைத்தார்? அந்த மன்றம் திறமையாகச் செயல்பட வில்லை’ என்ற காரணத்துக்காக அதைக் கலைத்தார் ஜனாதிபதி!

இந்திய நெருக்கடி நிலை நீங்கியது. 1978-ஆம் ஆண்டில் பத்திரிகை மன்றம் சட்டத்தை மறுபடியும் குடியரசுத் தலைவர் கொண்டு வந்தார். இந்தச் சட்டம் 3.1.1979 முதல் மீண்டும் நாட்டில் அமலுக்கு வந்தது. நீதிபதி ஏ.என்.சென் Justice A.N. Sen மன்றத்துக்குத் தலைவரானார்.

மன்றம்
அமைப்பு :

தலைவர் ஒருவர்; உறுப்பினர்கள் 28 பேர்; இந்த இருபத்தெட்டு மன்ற உறுப்பினர்களில் 20 பேர் பத்திரிகைக்காரர்கள் : 5 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; கல்வி; அறிவியல்; சட்டம்; இலக்கியம், பண்பாடு ஆகிய துறைகளில் யார் சிறப்பானவர்களோ, அவர்களில் 3 பேர் இருப்பார்கள். இதுதான் பத்திரிகை மன்றம் அமைப்பு வடிவம்.

பத்திரிகை மன்றத்தின் தலைவரை நாடாளுமன்ற மேலவைத் தலைவர் மக்களவைத் தலைவர் பத்திரிகை மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட ஓர் உறுப்பினர் ஆகியவர்களைக் கொண்ட குழுதான் முடிவு செய்யும்.

பத்திரிகை மன்றம் நீதிமன்றப் பணிகளையும் மேற்பார்வையிட வேண்டிய நிலையிருப்பதால், உச்ச நீதிமன்ற