பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



14


பத்திரிகை நடத்துவது எப்படி?


‘துக்ளக்’ சோ
விளம்பரம்

2005-ஆம் ஆண்டான இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் ‘துக்ளக்’ என்ற வாரப் பத்திரிகை ஆசிரியரான ‘சோ’ - ஒரு வழக்குச் சொல்லி; திரை உலகில் ஒரு நகைச்சுவை நடிகர். இனமான அரசியல் நடத்துவோரின் தொடர்பாளர்; அவர் முதன் முதலாகப் பத்திரிகை நடத்த விரும்பின நேரத்தில் :

சென்னை மாநகரில், தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில், ‘சோ’ பத்திரிகை நடத்தலாமா?” என்ற பெயரில் பொது மக்கள் கருத்தறிய, ஒரு வாசகர் வட்டத்தை நடத்தினார். ‘முரசொலி’ அடியார், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் அறந்தை நாராயணன், புலவர் என்.வி.கலைமணி மற்றும் சிலர் அதில் கருத்தறிவித்தார்கள்.

என்.வி. கலைமணி
கருத்துரை

“இன்றைய உலகில் பத்திரிகை நடத்துவது ஒரு சிறப்பான தொழில்தான். பத்திரிகை நடத்த ஏதோ பல்கலைக்