பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

277


பெற்றவரோ எந்த பத்திரிகை அலுவலகத்திற்குள்ளும் சென்று எப்படி நடக்கிறது பத்திரிகை என்ற விவரங்களை அறியலாம். அதைத் தடுக்கக் கூடாது; முடியாது.

சர்க்குலேஷனுக்குப் போகும் பத்திரிகைகளின் அடிப்படையில்தான் பத்திரிகைகளுக்கு அச்சுத்தாள் கோட்டா ஒதுக்கீடு செய்கிறார் பதிவாளர். அதனால், வாங்கிய பேப்பர் ஒதுக்கீடு அளவில் பிரதிகள் அச்சிடுகிறார்கள்; விற்பனை செய்கிறார்கள் என்பதற்கான ஒழுங்கான கணக்குமுறைக்குச் சரியான சான்று தேவையல்லவா? அதற்காகத்தான் பதிவாளர் அலுவலகம் சோதனை நடத்துகிறது.

எவ்வளவு இதழ்கள் அச்சடிக்கிறார்கள்? விற்பனையாகும் பிரதிகள் எவ்வளவு? விற்காத பிரதிகள் (ரிட்டர்ன்) எவ்வளவு? என்பதற்கான ஆவணங்களைச் சரியானபடி பத்திரிகை அலுவலகம் வைத்திருக்கா விட்டால், சர்க்குலேஷனுக்கு அனுப்பிய பிரதிகள் என்று கூறும் கணக்கை உண்மை என்று ஏற்றுக் கொள்ளாது புது தில்லியிலுள்ள பதிவாளர் அலுவலகம். அதற்குப் பிறகு அரசு அந்தப் பத்திரிகைக்கு குறைந்த விலையில் கிடைக்கும் தாள் ஒதுக்கீட்டை ரத்து செய்து விடும்.

ஒவ்வொரு பத்திரிகையும் அந்தந்த மாநிலத்தில் எவ்வாறு சர்க்குலேஷன் ஆகின்றது என்பதைப் பதிவாளர் அலுவலகம் அறிந்தாக வேண்டும் என்ற அக்கறைக்காகவே, அரசு நமது நாட்டை நான்கு பகுதிகளாகப் பிரித்து, அந்த ஒவ்வொரு பகுதி (Zone)க்கும் ஓர் அலுவலரை Circulation Officerராக நியமித்துள்ளார்கள்.

வடக்கு (North) மண்டலம் புது தில்லியிலேயே உள்ளது. தெற்குப் பகுதி (South) சென்னையில் உள்ளது. மேற்கு(West)ப் பகுதி மும்பையிலும், கிழக்குப் (East) பகுதி கொல்கொத்தாவிலும் பதிவாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

முதன் முதலாக எப்படிப் புதிய பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்பதை அறிந்து, மெட்ரோபாலிட்டன் நீதிபதி,