பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பத்திரிகைகள் தோன்றும் முன்பு செய்திகள் எப்படிப் பரவின!


உலகப் படம் எழுதுவோர், தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள், செய்திகளைச் சேகரிப்போர் ஆகியோரை அழைத்துச் சென்றான்.

நைல் நதி கடலில் கலக்கும் இடத்தில் ‘ரோசெட்டா’ (Rossetta) என்ற ஒரு கல்வெட்டை மாவீரன் நெப்போலியன் கண்டுபிடித்தான். அவன் அன்று அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த செய்தியை உலகுக்கு அறிவித்ததால்தான், எகிப்திய நாகரிகம் உலகத்தில் பெருமை பெறக் காரணமாக இருந்தது.

இந்த அரிய பணியை நெப்போலியனுடன் சென்ற வரலாற்றுச் செய்திச் சேகரிப்போரால் உலகுக்குக் கிடைத்ததில்லையா?

போர்க்கலை ஞானியான நெப்போலியனுடன் சென்ற வரலாற்றுச் செய்தியாளர்கள் லக்சார், Luxor, கர்நாக் Karnak என்ற இடங்களில் உள்ள பழம் பெரு கோவில்களின் செய்திகளைச் சேகரித்து Description De L Egypte என்ற நூலைத் தயாரித்து ஃபிரெஞ்சு அக்கடமிக்குக் கொடுத்தான்.

அந்த அரிய நூலிலிருந்து எடுத்த செய்திகளால்தான் எகிப்தில் மறைந்து போயிருந்த நாகரிகச் சின்னங்களை உலகம் அறியும் வாய்ப்பே உருவானது.

அஞ்சாநெஞ்சன் நெப்போலியனுடன் சென்ற வரலாற்றுச் செய்தி திரட்டுவோர், ரோசெட்டா கல்வெட்டில் இருந்த கிரீக், Greek, டிமோடிக் Demotic ஆகிய மொழிகளின் எழுத்துக்களை அப்படியே எழுதிப் படித்தறிந்தார்கள்.

ஃபேப்பரஸ் (Papyrus) என்ற காகித இலை வடிவங்களில் எழுதப்பட்ட கதை, கவிதை, நாடகச் செய்திகளையும் அந்தச் செய்தி சேகரிப்போர் திரட்டி, நூல் எழுதுவோருக்குக் கொடையாக வழங்கினார்கள் என்பது இதழியல் துறைக்குரிய ஒரு முன்னோடியான சம்பவம் அல்லவா?

பாரோக்கள் காலத்து
பிரமிடுகளின் செய்தி

பிரமிடுகளைக் கட்டிய பாரோக்கள் என்ற மன்னர்கள் ஆட்சியில் எழுத்தர்கள், எழுத்துக்களை நகல் எடுப்போர்,