பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

செய்தியாளரும் ஒரு தசாவதானக் கலைஞரே!


செய்து கொண்டு, ஓய்வுநேரங்களில் தகவல்களைச் சேகரித்துக் குறிப்பிட்டச் செய்தித் தாள்களுக்கு மட்டுமே செய்திகளை அனுப்புவர். அவற்றுக்குத் தக்கவாறு ஊதியம் பெறுவார்கள். இவர்களை Part-time Reporters என்பார்கள்.

6. ஒரு மாநிலத்தின் தலைநகரத்தில் இயங்கும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் நடைபெறும் செய்திகளை வழங்குபவர்களை மன்றச் செய்தியாளர்கள் (Lobby Correspondents) என்று குறிப்பிடுவார்கள்.

இந்த வகைச் செய்தியாளர்கள், அந்த நாட்டின் அமைச்சர்கள், குடியரசுத் தலைவர் அல்லது வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டிற்கு வருகை தரும் அதிபர்கள், மன்னர்கள், பிரதமர்கள் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்குப் பின்தொடர்ந்து சென்று, அவர்களுடைய சம்பவங்களைச் சேகரித்து நாடு முழுமைக்குரிய வகையில் முக்கியமானச் செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்.

7. இவ்வாறு பணிபுரியும் செய்தியாளர்களிலே Special Correspondents என்ற பெயரில் சிறப்புச் செய்திகளை மட்டுமே வழங்குபவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

8. ஒவ்வொரு ஊர் நிகழ்ச்சிகளைப் பார்த்து, அவற்றைப் பார்த்தது பார்த்தவாறே செய்திகளை அனுப்புவர்களும் Reporters இருப்பதுண்டு.

9. கண்ட செய்திகளைக் கண்டவாறும், அத்துடன் தங்களது யூகங்களைச் சேர்த்தும், செய்திகளை அனுப்பு வார்கள். இவர்களுக்கு விளக்கச் செய்தியாளர்கள் (interpretative Reporters) என்ற பெயருண்டு.

10. செய்தி வல்லுநர் எனப்படுவோர் ஒரு சம்பவத்தை நேரில் சென்று பார்க்காமலேயே அதன் முக்கியத்துவம் இதுதான் என்று உறுதியை அறுதியிட்டு எழுதுபவர்களை Expert Reporters என்று சொல்வார்கள்.

இவ்வாறு செய்தியாளர்கள் பத்து வகை ஆற்றல்களோடு ஆங்காங்கே பணிபுரிபவர்களாக விளங்குவதால், பொதுவாகச் செய்தியாளர்களைத் தசாவதானிகள் என்றும் அழைக்கலாம் அல்லவா? செய்தி சேகரிப்பதும் ஒரு கலைதானே!