பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


செய்தி என்றால் என்ன ?
தேர்வு செய்வது எப்படி?


செய்திகள் பத்திரிகைக்குச் செய்திகள் என்பவை தான் மூலப் பொருட்கள்! செய்திகள் இல்லையானால் செய்தித் தாள்கள் இல்லை. எனவே, செய்தி என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன என்பதை நாம் புரிந்து கொள்வது நல்லதல்லவா?

செய்தி என்ற தமிழ்ச் சொல்லுக்கு இங்லீஷில் News என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

News என்ற சொல்லில் உள்ள முதல் மூன்று எழுத்தை New என்று சொல்லுகின்றோம். New என்றால் புதிய, முன்னில்லாத, முதன் முதலாகத் தெரிவிக்கப்படுகின்ற, முன் உணரப்படாத, தெரிய வராத, முன் கேட்டறியாத, முன் கண்டறியாத, அண்மையில் தோன்றிய, புதிதாக ஆக்கப்பட்ட, அண்மையில் செய்து முடிந்த, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, புதிதான, பழக்கமில்லாத, மாறிய, மாறுபாடான புது மாறுதலுடைய, புதுப்பிக்கப்பட்ட, புதிதாகச் சேர்க்கப்பட்ட, கெடாத, புது நிலையிலுள்ள, பழமைப்பட்டு விடாத, தேய்வுறாத, தளராத, பளபளப்புக் குறையாத, புத்தாக்கம் பெற்ற, புத்துயர்வு பெற்ற, வேறு வகையான, அனுபவமற்ற, புதுமுறையான, புதிதாக என்ற 32 விதமான பொருட்களை அந்த New என்ற இங்லீஷ் சொல் அறிவிக்கின்றது என்று ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம் என்ற அகராதி