பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

289



News என்ற சொல்லில் உள்ள N என்பது North என்ற வட திசையையும், E என்ற எழுத்து East என்ற கிழக்கையும், W என்ற எழுத்து West என்ற மேற்கையும், S என்ற எழுத்து South என்ற தென் திசையையும் குறிக்கும் முதல் எழுத்துகளால் ஆன திசைகளது பெயராகும். அதாவது வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என்ற நான்கு திசைகளில் உள்ள நாடுகளிலிருந்து வரும் அன்றாடப் புதிய புதியச் செயல்களைக் குறிக்கும் செய்திகளாகும் என்று News என்ற இங்லீஷ் சொல் கூறுகின்றது. ஆங்கிலேயர் நான்கு திசைகளிலும் அன்றாடம் நடைபெறும் செய்திகளைக் குறிக்கவே News என்ற சொல்லை உருவாக்கியுனார்கள்.

தமிழில் அதைச் ‘செய்தி’ என்கிறோம், அந்தத் தமிழ்ச் சொல்லின் ‘தி’ என்ற இறுதி எழுத்து திசைகள் நான்கு என்று எண்ணி, அந்த நாற்திசைகளில் வரும் புதிய புதிய செயல்களைச் ‘செய்’ என்ற தமிழ்ச் சொல்லில் அடக்கி ‘செய்தி’ என்றால் உலகத்தின் நான்கு திசைகளிலிருந்து வரும் புதிய செயல்களுக்குச் ‘செய்தி’ என்று குறிப்பிடலாம் இல்லையா? சரி, என்றால் ஒப்புங்கள்; இல்லையென்றால் விட்டு விடுங்கள். அதனால் நமக்கு நட்டமில்லை அல்லவா? ஏனென்றால் செய்+தி = செய்தி தானே!

எதையாவது உலகுக்கு உரைப்பதுதானே செய்தி. இன்றைய செய்தி, நாளைய வரலாறுதானே செய்தி? அந்தச் செய்தி உலக மக்களின் கவனத்தை இழுக்கும் காந்த சக்திதானே செய்தி?

எனவே, புதுமையான செயல் எதுவோ? அது செய்தி! மனிதனுக்குச் சுவையூட்டுவது எதுவோ அது செய்தி! மக்களுக்கு ஆர்வமூட்டும் சம்பவம் என்னவோ அது செய்தி! அதைத் தெரிந்து கொள்ளும் கருவிதானே செய்தித் தாள்?

அந்தச் செய்திகள் புரட்சிகளாக இருக்கலாம்; உணர்ச்சிகளாக உந்தி எழலாம்; எழுச்சிகளை எடுத்துரைக்கலாம்; வீழ்ச்சி அழிவுகளை விளக்கலாம் சமுதாயத்தின் தனி மனித குற்றங்களாகச் சதிராடலாம்; நீதியை நிலை நாட்டும் சந்நிதானங்களாகவும் அமையலாம்; பொருளாதார வளர்ச்சி