பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

பத்திரிகைச் செய்திகளை வழங்கும் உலக, இந்திய அமைப்புகள்!



நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அவற்றின் விலை விவரங்களைத் தொகுத்து, உலக நாடுகளிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு வழங்கி வருவாய் தேடிய அவர், பிறகு, அரசியல், சமுதாயச் செய்திகளையும் திரட்டித் தரும் பணியில் உயர்ந்து நின்று செல்வர் ஆனார்.

இவரது நிறுவனம் உலகின் பல நாடுகளில் கிளைகளை அமைத்துக் கொண்டு இலண்டன் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு வளர்ந்தார்.

பெர்னால்டு உல்ஃப் நிறுவனம், பல்கேரியா, ருமேனியா, ரஷ்யா, கிரிஸ், துருக்கி போன்ற பல்வேறு நாடுகளிலும் செய்தி நிறுவனங்களை நிறுவி வந்தபோது முதல் உலகப் போர் 1914-18ல் உருவானதால், அதன் வளர்ச்சி குன்றி வீழ்ச்சியுற்றது.

இலண்டன் இராய்ட்டர்
நிறுவனம் (Reuter)

இராய்ட்டர் என்ற உலகச் செய்தி நிறுவனம் தற்போது இலண்டன் நகரிலே இருந்தாலும், இது 1850-ஆம் ஆண்டில் ஃபிரான்ஸ் நாட்டில் துவக்கப்பட்டு, 1851ல் இலண்டன் நகர் சென்றது.

இந்த நிறுவனம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் நாடுகளிலே உள்ள 4 பத்திரிகைகளுக்கு உரிமையானது.

60 நாடுகளில் 150 நிறுவனங்களுக்கு இந்த நிறுவனம் செய்திகளை வழங்கி வருகின்றது. தனியார் இதைத் துவக்கியபோது என்ன செல்வாக்கோடிருந்ததோ அதே மதிப்போடு இன்றும் உலகில் செய்திகளை அது வழங்கி வருகின்றது. ஏஜென்சி ஃபிரான்ஸ் பிரஸ் (Agency Franle Press) எனப்படும் செய்தி நிறுவனம், 1835-ஆம் ஆண்டில் சார்லஸ் ஹாவஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

ஏறக்குறைய 109 ஆண்டுகளாக இது செயல்படுவதுடன் உலகின் முதல் செய்தி நிறுவனம் என்ற புகழை நிலை நாட்டிக் கொண்டது.

இந்த நிறுவனம் ஃபிரான்சுக்குரியதாக இருந்தபோது, செர்மன் இதை ஆக்ரமித்துக் கொண்டது. ஃபிரெஞ்சுக்காரர்கள்