பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

295



போராட்டம் நடத்தியபோது இது தோன்றியது. அதனால் இது ஃபிரெஞ்சுக்காரர்களின் தலைமறைவுச் செய்திகளை வெளியிட்டதால் ஜெர்மானியர் இதைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இதற்கு ஆண்டுதோறும் பிரிட்டன் அரசு மானியம் வழங்கி வருகின்றது.

இந்த ஏஜென்சி நிறுவனத்தை 1957-ஆம் ஆண்டு முதல் ஃபிரெஞ்சுக்காரர்கள் சட்டத்தின் துணையால் தனித்தியங்க வைத்துள்ளார்கள். ஃபிரெஞ்சு செய்தித் தாள்கள், வானொலி, தொலைக்காட்சிகள், பொதுமக்கள் சார்பாளரும் இந்தச் செய்தி நிறுவன ஊழியர்களாகப் பணிபுரிகிறார்கள்.

ஏறக்குறைய 167 நாடுகளிலே இதற்குச் செய்தி நிறுவனக் கிளைகள் உள்ளன. 152 நாடுகளுக்குச் செய்திகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

அனைத்துலக யுனைடெட்
பிரஸ் செய்தி நிறுவனம்

இது 1907-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. ஸ்கிரிப்ஸ் யுனைடெட் பிரஸ் அசோசியேஷன் என்பது இதன் முழு பெயர். 1908-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஹர்ஸ்டஸ் இண்டர்நேஷனல் நியூஸ் சர்வீஸ் இத்துடன் இணைந்தது. 1958-ஆம் ஆண்டில் இது யுனைடெட் பிரஸ் இண்டர் நேஷனல் (UPI) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

இது தனியார் நிர்வாகத்தில் இயங்கி வரும் ஒரே ஓர் உலகச் செய்தி நிறுவனம். இதில் 92 நாடுகளிலுள்ள 7097 பத்திரிகைகள் கட்டண உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இரஷ்யாவின் டாஸ்
செய்தி நிறுவனம்

இந்த நிறுவனம் சோவியத் ரஷ்யாவில் செய்தி நிறுவனமாக இயங்கி வருகிறது. Telegrafnoe Agentsvo Sovetsrovo Soiuza என்பது இதன் முழு பெயர். இது 1918 முதல் TASS என்ற பெயரில் செய்தி நிறுவனமாக உள்ளது. இதனை 1925-ஆம் ஆண்டு வரை ரோஸ்டா (Rosta) என்று குறிப்பிட்டார்கள்.