பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

பத்திரிகைகள் தோன்றும் முன்பு செய்திகள் எப்படிப் பரவின!


 இருப்பதால்; தாவீது மிகச் சிறந்த எழுத்தாளர் என்று இன்றும் கிறித்தவக் கல்விமான்களால் போற்றப்படுகின்றார்.

நாகரிகத்தின் தாய்
சிந்து சமவெளி

உலகத்தில் எகிப்திய நாகரிகம், சுமேரிய நாகரிகம், பாபிலோனிய, அசிரிய நாகரிகங்கள் தோன்றியன போல, இந்தியாவிலும் சிந்து நதிக் கரையில் மொகஞ்சதாரோ, ஹரப்பா என்னுமிடங்களில் கி.மு. 3000 ஆண்டுகட்கு முன்பு திராவிட நாகரிகம் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கே கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளில் ஒரு வரி இடப்புறம் இருந்து வலப்புறமாகப் போவதும், அடுத்த வரி வலப்புறம் இருந்து இடப்புறம் போவதுமாக இருந்தன. இந்த ஒலிக்குறிகள் மீண்டும் மீண்டும் தோன்றுவதால்; இந்த எழுத்துக்கள் சித்திர முறையும் ஒலி முறையும் இணைந்ததாக இருந்தன.

சிந்துவெளிப் பண்பாடுகள், எகிப்திய, சுமேரிய மெசபட்டோமிய பண்பாடுகளுக்கு ஒத்திருந்தாலும், மேற்கண்ட ஒவ்வொரு நாகரிகமும் தனித்தனி எழுத்து முறைகளோடு சிறந்திருந்தன. என்றாலும், வேதகால நாகரிகத்திற்கு மாறுபட்டது; முற்பட்டது; மேம்பட்டதுமாகும். ஹீப்ரு நாகரிகத்தில் தோன்றிய எழுத்தாளர்களைப் போல சிந்து நாகரிகத்தில் எவரும் இருந்ததாக எந்தவிதக் குறிப்புகளும்

கிரேக்கம் - ரோமானியம்
செய்தி நிலைகள் வளர்ச்சி

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் நாகரிகத் தொட்டில்களாக விளங்கிய எகிப்து, மெசபடோமிய, ஹரப்பா - மொகஞ்சதாரோ, சீன நாகரிகங்கள் கி.மு. 4000 ஆண்டுகட்கு முன்பு தோன்றி வளர்ந்தவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.