பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

பத்திரிகைச் செய்திகளை வழங்கும் உலக, இந்திய அமைப்புகள்!


பணியாற்றினார். அந்த நிறுவனத் தலைவர் டாக்டர் பி.சி. ராய் என்பவராவார். 1948-ஆம் ஆண்டுக்குப் பிறகு இது வளர்ச்சிப் பெற்று வந்தது.

தற்போது இந்தியாவில் டெலி பிரிண்டர் வசதிகளுடன் நான்கு பெரிய செய்தி நிறுவனங்கள் உள்ளன. அவை : இந்தியாவின் பிரஸ் டிரஸ்ட் (Press Trust of India), இந்தியாவின் யுனைடெட் நியூஸ் (United News of India) அதாவது UNI, இந்துஸ்தான் சமாச்சார் (Hindustan Samachar) சமாச்சார் பாரதி (Samachar Bharathi) என்பவைகளே அவை.

இந்தச் செய்தி நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவின் மாநிலங்களிலே இருந்து வெளிவரும் இந்தி, மராத்தி, நேபாளி, குஜராத்தி, ஒரியா, கன்னடா, பஞ்சாபி, உருது, தெலுங்கு, தமிழ், மலையாளம், வங்காளம் ஆகிய இந்திய மொழிப் பத்திரிகைகளுக்குரிய, எல்லாச் செய்திகளையும் வழங்கி வருகின்றன.

இந்துஸ்தான் சமாச்சார், சமாச்சார் பாரதி, இந்தியாவின் யுனைடெட் நியூஸ் ஆகிய மூன்றின் செய்தி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களும் இந்தியாவின் தலைநகரமான புது தில்லியிலே இயங்கி வருகின்றன. Press Trust of India என்ற செய்தி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மும்பை நகரிலே அமைந்து இயங்கி வருகின்றது.

சமாச்சார்

இந்திரா காந்தி அம்மையார் இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில் நெருக்கடி நிலையை 1976-ஆம் ஆண்டின் போது நாட்டில் அமல்படுத்தினார் அல்லவா? அப்போது இந்திய அரசு மேற்கண்ட நான்கு செய்தி நிறுவனங்களையும் ஒன்றிணைத்து ‘சமாச்சர்’ (Samachar) என்ற செய்தி நிறுவன அமைப்பை உருவாக்கிச் செய்திகளை, சென்சார் செய்து வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு 50 லட்சம் ரூபாயை மானியமாகக் கொடுத்தது.

மத்திய ஆட்சியில் 1977-ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு புதிய மாற்றம் உருவானாது. 14.4.1978ஆம் ஆண்டில் மறுபடியும் இணைந்த பழைய நிறுவனங்கள் நான்கும் பிரிந்து அதனதன் சுதந்திர உரிமைகளோடு இயங்கின என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.