பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

29



இத்தகைய அரும்பெரும் நாகரிகங்களிலிருந்து கி.மு. 60ம் ஆண்டுக்குப் பிறகு, மேல் நாட்டு நாகரிகங்கள் கிழக்கு நாடுகளில் இருந்து விலகி, ஐரோப்பாவின் கிரீஸ், இத்தாலி நாடுகளில் உருவாகித் தனிமையாக் வளர்ந்தன.

இந்தத் தனிமை வளர்ச்சி, தனிமனித நலம், மனித உரிமை போன்ற சிந்தனைகள்: வல்லாட்சி முறை, குழு ஆட்சி முறைகளை ஒடுக்கின. அதனால் கிரேக்க, ரோமானிய நாகரிகங்களின் செல்வாக்குகள் நிலைநின்றன.

தற்கால நாகரிகத்தை உருவாக்கிய முன்னோடிகளாக - கிரேக்க நாகரிகமும் ரோமானிய நாகரிகமும் உள்ளன. இத்தகைய நாகரிக வளர்ச்சியில் ஒன்றான கிரேக்க நாகரிகத்தில் புதிய மேலை நாட்டு இலக்கியங்களான பெருங்காப்பியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், நாடகம், முல்லைப் பாடல், இலக்கியத் தகுதியுடைய வரலாறுகள், பேச்சுத் திறன் படைத்த சொற்பொழிவுகள், புலப்பாட்டியல் (Rhetoric) ஆகியன உலகத்திலேயே முதன் முறையர்க, முதல் தரமாகக் கிரேக்க நாட்டில் வளர்ந்தன.

எழுத்தாளர்
ஹோமர் :

உலகப் புகழ் பெற்ற காவியங்களான இலியட், ஒடிசி என்ற நூல்களை ஹோமர் என்ற எழுத்தாளர் எழுதினார். இதைப் பற்றிய ஆய்வுச் சர்ச்சைகள் பல இருந்தாலும், இசைப் பாடல்களாக எழுதப்பட்ட இந்தக் காவியங்களில்; வருணனைச் சிறப்புகள் சிறப்புப் பெற்றுள்ளன. அதனால் அந்தக் காலத்தில் ஹோமர் காவியங்கள் மக்கள் இடையே வாய்மொழிச் செய்திகளாக இடத்துக்கு இடம் மாறிப் பரவின.

கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ, மேல் நாட்டின் அரசியலில் முதல் சிந்தனையாளர் என்று புகழ் பெற்றார். கி.மு. 427ல் பிறந்து 347ல் மறைந்தவர். இடைக் காலத்தில் அவர் 36 தத்துவ, அறிவியல், மெய் விளக்க நூற்களை எழுதினார். அவரது கருத்துக்கள், அக்காலத்திலுள்ள நாட்டு மக்கள்