பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

நீதிமன்றச் செய்தியாளர்கள் கவனிக்க வேண்டியவை!



❖ எல்லாரும் புரிந்து கொள்ளும் எளிய சொற்களால் நீதிமன்றச் செய்திகளை எழுத வேண்டும்.

❖ வழக்கைப் பற்றிச் செய்தியாளர் தனது கருத்துக்களைக் கூறக் கூடாது.

❖ வழக்கு நடந்த முறையை நடுநிலையோடு விளக்க வேண்டும்.

❖ படிக்கும் மக்கள் ஆர்வத்தைத் தூண்டும் நீதிமன்றக் காட்சிகளைச் சுவைபட எழுதுவது நல்லது.

❖ ஆனால், வெளியிடக் கூடாது என்று நீதிபதி கூறியதைச் செய்தியாக எழுதக் கூடாது

❖ வழக்கின் தீர்ப்பை முதலில் குறிப்பிட்டுவிட்டு, பிறகு விபரத்தை விளக்கலாம்.

❖ வழக்கு நடந்த விதத்தைத் தவறாக வெளியிட்டால் தண்டனை கிடைக்கும்.

❖ நீதிமன்ற வழக்கின் முடிவை யூகத்தோடு முன்கூட்டியே வெளியிடக் கூடாது. நீதிபதியைப் பற்றிக் கருத்தேதும் குறிப்பிட்டு எழுதக் கூடாது.

❖ கணவன் - மனைவி விவாக ரத்து, கற்பழிப்பு, இரவு ராணிகள் விளையாடல்கள் மீது நடக்கும் வழக்குகள் சுவையாக இருக்கிறதென்று அப்படியே அவற்றைப் பத்திரிகையில் வெளியிடக் கூடாது. ஏன் தெரியுமா? சமுதாயத்தின் பண்பாடு கெடும், பத்திரிகை தர்மமும் அன்று. இவை போன்ற சமுதாய ஒழுக்கக் கேடுகளை வளர இடம் தரக் கூடாது. சட்டமும் இதைத் தடுக்கிறது; தண்டனை தருகிறது.