பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



24


பொதுக் கூட்டச் செய்தியாளர்;
உரை சுவையில் மயங்கிவிடக் கூடாது!



த்திரிகைக்குரிய பலவகைச் செய்தி சேகரிப்பாளர்களில் பொதுக் கூட்டத்தில் செய்தி திரட்டுபவரும் ஒருவர். காரணம், இக் காலத்தில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பேரூர்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும், மாநிலத் தலைநகரத்திலும், ஏன் சிற்றூர்களிலும்கூட நாள்தோறும் தங்களுடையக் கட்சிக் குறிக்கோள்களை விளக்கிக் கூட்டங்கள் நடத்துகின்றன. பொது மக்கள் ஆயிரக்கணக்கிலும், இலட்சக்கணக்கிலும் கூடுகின்றார்கள். அவர்களுக்கு ஏற்றக் கருத்துக்கள் அங்கங்கே பேசப்படுகின்றன.

ஒவ்வொரு நகரங்களிலும், பேரூர்களிலும் இலக்கிய வட்டத்துப் பேரறிவாளர்களை அழைத்து, அரசு விடுமுறை நாட்களிலும், விழாக் காலங்களிலும் - இலக்கிய, தமிழார்வக் கூட்டங்கள், கவியரங்குகள் நடைபெறுகின்றன. அவற்றில், அறிஞர்களது பொழிவுரைகளில் சமுதாயத்திற்கும், இலக்கியத் துறைக்கும், ஏன், அரசியலுக்கும் பயன்படக்கூடிய கருத்துக்கள் உரையாற்றப்படுகின்றன. இந்தக் கூட்டங்களது சொற்பொழிவுகளைக் கேட்டுச் சுவைத்திட அறிஞர்கள், கல்விமான்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் திரள்கின்றார்கள்.

சில திருக்கோவில் வளாகங்களில், புராண, இதிகாச, வேத, காலட்சேபங்களும், தேவார, திருவாசக, சைவ, வைணவ