பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

பத்திரிகைகள் தோன்றும் முன்பு செய்திகள் எப்படிப் பரவின:


இடையே முற்போக்குச் சிந்தனைச் செய்திகளாகப் பரவி மக்களைச் சிந்திக்க வைத்தன.

கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டில் பிளேட்டோவின் மாணவராக விளங்கியவர். தலைசிறந்த தத்துவஞானி, விஞ்ஞானி, அரசியல் சிந்தனையாளர், ஆய்வு மேதை, அவரது எண்ணங்கள் நூல்களானதால், அந்தக் கருத்துக்கள் மக்கள் இடையே செய்திகளாகப் பரவின. புது உணர்ச்சியை உருவாக்கின.

பேரறிஞர் ஹீசியாத் (Hesiod) என்பவர் எழுதிய நீதி நெறிகள் மக்கள் ஒழுக்கத்துக்கு வழிகாட்டும் செய்திகளாயின. கடவுள்கள் வரலாறுகளை தியாகனி(Theogony) என்பவர் எழுதியதால் அவருடைய ஆன்மீகக் கருத்துக்கள் மக்களின் பக்திச் செய்திகளாக உருவெடுத்து தெய்வ வழிபாடுகளாயின.

அசைலஸ் (Aesehylus) என்பவர் கி.மு. 525 முதல் 456 வரை எழுதிய நாடக நூற்கள், கடவுளுக்கும் மனிதனுக்குமுரிய தொடர்புகளை உருவாக்கும் செய்திகளாகப் பல இடங்களில் மக்கள் இடையே நாடகங்களாக நடத்தப்பட்டன.

தனி மனித போராட்டங்களை முதன் முதலாக எழுதியவர் சோபக்லீஸ் (Sophocies) என்பவர். இவர் கி.மு. 496 முதல் 406 வரை வாழ்ந்த காலத்தில் அரசு அதிகாரத்துக்கும் குடிமக்களுக்கும் இடையே உண்டான போராட்டங்களைச் செய்திகளாக்கினார். அதனால், மக்கள் புதுவித அரசியல் எழுச்சிகளைப் பெற்றுப் போராளிகளாக மாறினார்கள்.

அரிஸ்டோபான்ஸ் Aristophanes, யூரிபிடீஸ் Euripides என்ற நாடகாசிரியர்கள் எழுதிய நாடகங்களை மக்களே பொழுதுபோக்கு நாடகங்களாக நகர்தோறும் நடத்தி மனித உரிமைகளைச் சிந்திக்க வைக்கும் செய்தியாளர்களாக விளங்கினார்கள்.

வரலாற்றின் தந்தை என்று இன்று உலகத்தால் போற்றப்படும் கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரடோட்டஸ், Herodotus கி.மு. 484 முதல் 420 வரை வாழ்ந்த; காலத்தில் அவர்