பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

327



4. பெற்ற வெற்றிகளின் திறமை உணர்வுகள்; செயல் நுட்பங்கள்.

5. ஏதாவது ஆட்ட விவகாரங்களில் குறைபாடுகள், சர்ச்சைகள் நடந்ததுண்டா? அவை எவ்வாறு தீர்க்கப்பட்டன?

6. என்ன குறைகளை அவரது ஆட்டத்தில் நிபுணர்கள் கண்டார்கள்? அல்லது பெற்ற பாராட்டுணர்வுகள் என்ன?

7. ஆட்டத்தில் ஈடுபட்டது முதல் அன்று வரை அவர் சாதித்த விளையாட்டுச் சாதனைகள் என்னென்ன?

8. அவர் ஆடிய ஆட்டங்களில் அவரால் நிரூபிக்கப்பட்ட அற்புத நுட்ப உணர்ச்சிகள்?

9. அந்த நுட்பத் திறமைமிக்க ஆட்டத்தால் உண்டான திருப்புமுனை வெற்றிகள்.

10. ஆட்டத்தின் இறுதி நேரத்தில் அவர் காட்டிய உணர்ச்சிக் கூறுகள்.

11. அதனால் திடீரென எதிரணிக்கோ அல்லது தனது அணிக்கோ ஏற்பட்ட சாதனைகள்!

12. ஆடு களங்களில் ஏதாவது விபத்துகளில் சிக்கினவரா?

13. ஆட்டத்தில் திரண்டிருந்த ஆட்ட ரசிகர்கள் அளவு என்ன?

14. எந்த ஊர்களில் ஆடினாலும் அவர் ஆடிய களங்களின் அமைப்பு நிலை.

15. ஆரம்ப கால நிலை; அதனால் ஏற்படும் தட்பவெப்ப, சாதக, பாதக நிலைகளது விளைவுகள்.

16. ஆட்டத்தில் பணியாற்றும் நடுவர்கள் யார்? அவர்கள் தரம், தகுதிகள் என்ன?