பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

பத்திரிக்கை ஆசிரியராக தகுதிகள்; திறமைகள்!


நூலில் குறிப்பிடுகிறார். இது நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து.

ஒருவர் பத்திரிகை ஆசிரியராவதற்கு; அதற்கென தனி சட்டத் திட்டமோ, ஒழுங்குமுறைகளோ, அதற்கான மனுபோடும் பணிகளோ, தேர்வு சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளோ ஒன்றுமில்லை.

பணம் இருந்தால், ஆசிரியராகும் ஆசை இருந்தால், சம்பந்தப்பட்ட பத்திரிகைத் துறையின் நீதி மன்றத்துக்கு விண்ணப்பம் செய்து, நீதிமன்ற அனுமதியைப் பெற்று விட்டால் எவரும் ஆசிரியராகலாம்.

ஒருவர் பத்திரிகை ஆசிரியராக வேண்டுமானால், அவ்வளவு சுலபமாக ஆக முடியாது. அதற்கு பல்வேறு திறமைகள், அனுபவங்கள், தொழில் நுட்பங்கள், நூலறிவு பெற்றத் தனித் தன்மைச் சாதனைகள் எல்லாம் ஒருங்கிணைந்து இருந்தால்தான்; ஒரு சிறந்த பத்திரிகை ஆசிரியராக முடியும். ஏனென்றால், அந்த பத்திரிகையின் எழுச்சியும், வளர்ச்சியும், உணர்ச்சியும், புரட்சியும் வீழ்ச்சியும் அந்த ஆசிரியரையே சார்ந்திருக்கின்றது.

திருவள்ளுவர் பெருமான் கூறுவதைப் போல “தொட்டனைத் தூறும் மணற்கேணி - மாந்தர்க்குக் கற்றணைத் தூறும் அறிவு” என்பதற்கேற்ப, எவ்வளவுக் கெவ்வளவு தோண்டுகின்றோமோ, அவ்வளவுக் கவ்வளவு மணற் கேணியில் நீர் சுரப்பதைப் போல, எவ்வளவுக்கெவ்வளவு கல்வி கற்கின்றோமோ, நூலறிவு பெறுகின்றோமோ, அவ்வளவுக் கவ்வளவு அறிவு சுரந்து பெருகும். அந்த அறிவுதான் பத்திரிகை நடத்துவதற்கு அச்சாணியாகும்; முதலீடாகும்; திறமையும் பெருகும்.

இதைத்தான் ஒளவை பெருமாட்டி, “உற்ற கலை மடந்தை ஓதுகிறாள்” என்றாள். அதாவது கல்விக்குரிய தெய்வமே இன்றும் படித்துக் கொண்டே இருக்கின்றாள் என்கிறாள். அதனால், “யாதானும் நாடாமால், ஊராமல் என்னொருவன்; சார்ந்துணையுங் கல்லாதவாறு” என்று தமிழ்