பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

பத்திரிக்கை ஆசிரியராக தகுதிகள்; திறமைகள்!


எழுத்தாளர்களிடம் படித்த பழைய எண்ணங்கள் பளிச்சென்று நிழலாடும்; நினைவுகளாக நிற்கும்.

ஆசிரியர் எழுதும் ஆதாரச் சான்றுகள், கண்டனம், ஏளனம், வசை, வரலாறு, இலக்கியம், அறிவியல், அரசியல், இழிபெயர் தருவது, புகழைக் குன்ற வைப்பது அல்லது புகழை மலைச் சிகர ஒளியாக்குவது, உள் நினைவை உந்தி ஏழ வைப்பது, தனக்குள் நிகழ்ந்ததை தானே எண்ணியெண்ணி மகிழ்வது போன்ற குறிப்புக்களாகவும் அவை அமையலாம். அதனால் ஆசிரியர் அந்தந்த குறியீடுகளுக்குள் அவற்றை அடக்கிக் காட்டினால்தான், வாசகர்கள் அதைப் படித்து உணர்வும் உற்சாகமும் பெற்று உவகையுலா வருவார்கள். அந்த உலாவின் எதிரொலி, பத்திரிகை விற்பனைக்குப் பவனி வரும் பறை போல ஒலிக்கும்.

ஆசிரியரின் அந்த வீர உலா, ஈர உலா, உவகை உலா எழுத்துக்கள், அரசியல் குறைகளை நீக்கலாம்; ஊழல்களைப் போக்கும் சீராக்கமாகவும் இருக்கலாம். ஆன்மிகத் துறையில் புதுமைகள் புகலாம்; நாடாளுமன்ற, சட்டமன்ற காரசார நிகழ்வுகளுக்கு அமைதியூட்டும் நிழற்குடைகளாகலாம். எனவே, பத்திரிகை ஆசிரியரின் மேற்கண்ட பணிகள் நாட்டைச் சீர்திருத்தலாம்; வாசகர்கள் இடையே மனமாற்றங்கள்கூட நிகழாலாமில்லையா?

பத்திரிகை ஆசிரியரின் இத்தகையக் கருத்துக்களை, எண்ண ஓட்டங்களை, சொல்லாட்சிகளைக் கவனமாகப் படிக்கும் வாசகர்கள், பத்திரிகையைத் தொடர்ந்து வாங்குவோராகவும் மாறலாம். அவர்கள் நிலையான சந்தாதாரர்களாகலாம்; அதனால், பத்திரிகை விற்பனையாளர்களுக்குப் பணமும் ஒழுங்காக வசூலாகும். வசூலானால் பத்திரிகை வளரும்; முன்னேறும்; தொழிலாளர்களுக்கு உற்சாகத்தோடு பணியாற்றிடும் புதுத்தெம்பும் பிறக்கும். அதனால் பத்திரிகைப் பெயரும் ஆசிரயரது எழுதுகோலின் தகுதியும், திறமையும், கட்சி சார்பற்ற புகழ் மெருகும் ஏறுமல்லவா?

“எந்த அளவைகள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்ததே அல்லாமல், தனி நிலை இயல்புகள் உடையன