பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

பத்திரிகைகள் தோன்றும் முன்பு செய்திகள் எப்படிப் பரவின


புதுமைச் செய்திகளை மக்களுக்கு அறிவிக்கும் பயணச் செய்தியாளராக அவர் நடமாடினார். எகிப்து நாட்டில் அவர் தங்கியிருந்தபோது உலகப் புகழ்பெற்ற பிரமிடுகளின் நிழலை அளந்து அதன் மூலம் அதன் உயரத்தை கணக்கிட்டு, முதன் முதலாக உலகுக்குக் கூறிய செய்தியாளராகவும் இருந்தார்.

அண்டத்தின் Universal இயக்கத்தை ஆராய்ந்து, பூமி நீள்வட்ட வடிவானது என்று கூறி, உலகப் படத்தை முதன் முதலாக வரைந்தவர் அனாக்சிமாண்டர் Anaximander என்பவர். இவர் கி.மு. 611 முதல் 547 வரை வாழ்ந்த வானியல் மேதை. சூரியக் கடிகாரம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து நேரத்தைக் கணக்கிட்டுக் கூறியதால் உலக நாடுகளுக்குகெல்லாம் அவர் அதிசய செய்தியாளராக அப்போது திகழ்ந்தார்.

கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் Pythagorus என்பவர் கி.மு. 582 முதல் 500 வரை வாழ்ந்தவர். ‘பித்தகோரஸ் கல்வி மையம் என்ற ஒன்றை அவர் ஊருருக்கு மன்றங்களாக அமைத்து, மாணவர்களைச் சேர்த்து அந்தந்த ஊர்களில், தான் கண்டுபிடித்த கணித வரலாறான ஒற்றை எண், இரட்டை எண், பகா எண் Odd numbers, Even numbers, Composite Numbers, Prime numbers பகு எண் ஆகியவற்றைக் கணித முறைச் செய்திகளாக்கிப் பிரச்சாரம் செய்த முதல் வித்தகர் ஆவார். இவரது கணித முறைதான் வடிவ கணிதத்தில் (Geometry) பித்தகோரஸ் தேற்றம், (Theorem) துணைத்தேற்றம் (Rider) ஆகியவற்றைத் தன் மாணவர் மன்றங்கள் மூலமாகச் செய்தியாக வெளியிட்டு நாடோடியாகப் பேசி கொண்டே ஊரூர் சுற்றி வாழ்ந்தார்.

சூரியன் உலகத்தின் நடுநிலையாக உள்ளது. கோள்கள் சூரியனைச் சுற்றி ஓடி வரும் பாதைகள் வட்ட வடிவமாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறியதற்காக, அப்போது கிரீஸ் மன்னனாக இருந்த பாலிக்கிரட்டீஸ் என்பவன் கடவுள் வகுத்த சூத்திரத்தை எதிர்த்து வாதிடும் இந்த பித்தாகரஸ் யார்? இவ்வாறு கூற இவனுக்கு என்ன உரிமை? என்று ஆணவமாடி அவரைக் கைது செய்து நாடு கடத்தினான். நாடோடியாய், ஊரூராய் அலைந்து தனது கருத்தை மக்கள் இடையே செய்திகளாக அறிவித்தார் பித்தகோரஸ்.