பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

எழுத்துரிமை, பேச்சுரிமைகளைக் காக்க கட்சிப்பத்திரிகைகள் நடத்துவது எப்படி?



ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலக் கட்சிகள் இயங்கி வருகின்றன. அவை அந்தந்த மாநிலங்களின் முன்னேற்ற வளர்ச்சிக்காக அரசியல் துறையில் பணியாற்றி வருகின்றன.

தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம், இன எழுச்சி உணர்வோடு ஏறக்குறைய 70 அல்லது 75 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. அவற்றுள் மூத்த, மிகப் பெரியக் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திராடர்கழகம் ஆகியவை ‘திராவிட’ என்ற இன உணர்வுப் பெயரை முன்னிறுத்தி, அதன் பெயரால் இயங்குகின்றன. இவற்றுள் திராவிடர் கழகம் அரசியலில் ஈடுபடாத இன உயர்வுக்காக பணியாற்றி வரும் தாய் கழகம் ஆகும்.

இதற்கு அடுத்தப்படியாக, ஐந்தாறு மாவட்டங்களில் மக்கள் செல்வாக்குப் பெற்ற கட்சி பட்டாளி மக்கள் கட்சி; சிற்சில மாவட்டங்களில் தலித் மக்களுக்காக பாடுபடும் கட்சிகளும் உள்ளன. அகில இந்திய அளவிலான கம்யூனிஸ்ட் கட்சிகள் சில மாவட்டப் பகுதிகளில் பலம் பெற்று இயங்குகின்றன. தேவரின மக்களுக்காக உழைக்கும் கட்சிகளும் உள்ளன. முஸ்லீம் லீக் கட்சி அகில இந்திய அளவில் வளர்ந்துள்ளதால் தமிழ்நாட்டிலும் முஸ்லிம் லீக் கட்சி ஏறக்குறைய 60 அல்லது 65 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

பாரதீய ஜனதா கட்சி என்ற ஓர் அகில இந்தியக் கட்சியை செல்வி ஜெயலலிதா தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி அரசியலில் செல்வாக்கை உருவாக்கிக் கொடுத்தார். இதுதான் அந்தக் கட்சியின் தமிழ்நாட்டு வரலாறு. பிறகு கலைஞர் அதற்கு பரவலான செல்வாக்கு வளரக் காரணமானார்.

அகில இந்திய தேசியக் காங்கிரஸ், தமிழ் நாட்டில் 1885-ம் ஆண்டு முதலே வேரூன்றியக் கட்சி. அக்கட்சி வரலாறு தேசிய செல்வாக்குப் பெற்றது மட்டுமன்று. பெருந்தலைவர் காமராசர் அவர்கள் என்று காங்கிரஸ் கட்சியில் தனது காற்சுவடுகளைப் பதித்தாரோ அன்று முதல் அது மிகப் பெரும் அரசியல்