பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

எழுத்துரிமை, பேச்சுரிமைகளைக் காக்க கட்சிப்பத்திரிகைகள் நடத்துவது எப்படி?


பரப்புவதற்காக ஏறக்குறைய எழுபது ஆண்டு காலமாக நடைபெற்று வரும் ஒரே ஒரு திராவிடரியக்கக் கொள்கை இதழாகும்.

‘சங்கொலி’ மறுமலர்ச்சித் தி.மு.கழகத்திற்குரிய வார இதழாக, அதன் வளர்ச்சிக்குரிய ‘சங்கொலி’யை வாரந்தோறும் போர்க் களக் போர்க் காலச் சங்கு போல ஒலித்து திராவிடரியக்கத்தைத் தட்டி எழுப்பிக் கோட்டைக்குப் போகப் பாதை அமைத்து வருகின்றது. இந்தக் கழகத்திற்கு அவசியம் ஒரு நாளேடு தேவை. என்ன காரணமோ, புரட்சிப் புயல் ‘வைகோ’ சிந்தித்துக் கொண்டிருக்கின்றார். அந்தச் சிந்தனை, க. திருநாவுக்கரசு பொறுப்பாசிரியராக இருக்கும் காலத்திலேயே வெற்றி பெறுமானால் நாட்டுக்கு நல்லதோர் விடிவு காலத்தை உணர்த்தும் சங்கொலியாக அமையும்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் அவர்கள் ‘தினக்குரல்’ என்ற நாளேட்டை நடத்தினார். அந்தக் குரல், கட்சி சந்தடி ஓசையிலே மறைந்து விட்டது. மீண்டும் எழுமா?

அகில இந்திய அளவில் எல்லா வளமும் உடைய தேசியக் காங்கிரஸ் கட்சி தனக்கென ஒரு தின ஏடு இல்லாமலேயே இருக்கின்றது? காலம்தான் அதன் கவனத்தைக் கணிக்க வேண்டும்.

தமிழ்நாட்டு அரசியலில் எழுத்துரிமைகளைக் காக்க, பேச்சுரிமையை நிலை நாட்ட, பொடா, தடாக்களது சட்டக் கொடுமைகளை, கோரங்களை மக்களுக்கு எடுத்துரைக்க எப்படிப்பட்ட கட்சி ஏடுகள் தேவை. அதை நடத்துவது எப்படி? எந்தக் கட்சி ஏடுகளிலே அதற்காகப் பயிற்சி பெறுவது நல்லது என்பதை; வருங்கால இளையத் தலைமுறைப் பத்திரிகை ஆசிரியர்கள் எண்ணிடத் தயாராக வேண்டும் என் பதற்காகவே, இந்தப் பகுதிக்கு ‘கட்சிப் பத்திரிகை நடத்துவது எப்படி?’ என்று ஒரு புதிய பகுதியை எழுதுகிறோம். ஆர்வமுள்ள இளைய தலைமுறைகள் படித்துப் பயன் பெற்றால் மகிழ்ச்சி.