பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

எழுத்துரிமை, பேச்சுரிமைகளைக் காக்க கட்சிப்பத்திரிகைகள் நடத்துவது எப்படி?



மதச் சார்பின்மை, அரசியல் ஒழுக்கம், சமயச் சார்பற்ற கல்வி முறை, குறிப்பாக சமுதாய வியல் ஒழுக்கம், சமநிலை உணர்ச்சியுடைய கட்டுரை எழுத்துக்கள்தான் பத்திரிகைக்குரிய பெருமையை வழங்கும். எதிலும் புல்லறிவாண்மையை Smatterer நுழைய விடுவீர்களேயானால், உங்கள் இடமிருக்கும் சுறுசுறுப்புகள் (Smartness) துடிதுடிப்புகள் எல்லாமே தளர்ந்து போய்விடக் கூடும்.

நீங்கள் எழுதும் கட்டுரையில் என்னென்ன Styles இருக்க வேண்டும் தெரியுமா? இதோ சில :

பரந்த நீர் பரப்பில் அலையாடாத,

ஒலி வகையில் வல்லோசை இல்லாத மெல்லோசையோடு,

வள்ளலார் அருட்பாடல் மென்மை போல,

கடுகடுப்பு, சொரசொரப்பு இல்லாத இன்சொற்கள்

நத்தை நடை, ஆமை நடைகளை அகற்றி, ‘அரிமா’ நோக்கு நடை வளம்,

முயல் வேக, மான் வேக ஓட்டத்தோடு பாயும் தமிழ் வேகம் துள்ளத் துள்ள,

முழு நிலா சந்திரனை உடைத்து அந்த ஒளிக் குளிர்ச்சியை மையாக ஊற்றி எழுதும் போக்கு,

தென்றற் சிறு காற்றலையின் இதமான வீச்சுடன் வரவேற்று வாழ்த்தும் தமிழ்நடையில் கட்டுரைக் கருத்துக்களை எழுத வேண்டும்.

இத்தகையக் கட்டுரையைக் கட்சிப் பத்திரிகையில் முதன் முதலாக படித்த ஒரு வாசகன், நாளையும் பத்திரிகை வாங்க வரமாட்டான் என்றா எண்ணுகிறீர்கள்? ஆளும் கட்சித் தலைவர்களை இந்த Styleல் வரவேற்றுப் பாருங்கள். விற்பனைப் பெருகாதா?

எதிர்த்து எழுதும்
கட்டுரை நடையில்...

ஆட்சிக் கட்சித் தலைவர்களை, எதிர்க் கட்சியைச் சேர்ந்த பத்திரிகைகளைக் கண்டனம் செய்து எழுதும் தமிழ் நடை