பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

எழுத்துரிமை, பேச்சுரிமைகளைக் காக்க கட்சிப்பத்திரிகைகள் நடத்துவது எப்படி?


வழக்கமாக படிக்கும் அந்தப் பத்திரிகையின் வாசகர்கள் பக்தர்களாகி விடுவார்கள்.

குறிப்பு :- வாயால் சொல்லி விட்டால் போதுமா?

எங்கே எடுத்துக் காட்டுக் கட்டுரைகள் என்று கேட்போர்களுக்கு ‘மறுப்புக் கட்டுரை எழுதுவது எப்படி?’ என்ற இப் புத்தக இறுதிப் பகுதியிலுள்ள கட்டுரைகளைப் படித்துப் பின்பற்றினாலே போதும். பல நூல்களது ஆதாரச் சான்றுகள் (References) உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் எழுதுவதற்கும் அவை அடிப்படையாகச்

சான்றளிக்கும்.

கலைஞர் ‘முரசொலி’

“முரசொலி”க்கும் வயதாகி விட்டது. Box Box-சாக பெட்டிச் செய்திகளை எழுதிக் குவிக்கும் ‘முரசொலி’ மாறன் அவர்களும் இப்போது இல்லை. இப்போது அது வேங்கைக்கு வாய்ப்பூட்டு போட்ட நிலையில் இருக்கிறது.

‘தீக்கதிர்’ ஏட்டைப் படிக்கும் போது ஒரு கம்யூனிஸ்ட் பத்திரிகையின் வைர நெஞ்சுரத்தைக் காணலாம். அற்புதமான தமிழாய்வுகள், அறிஞர்களது வரலாறுகள் அனைத்தையும் அது வழங்கித், தொண்டர்களை ஊக்குவிக்கும் ஆக்கப் பணிகளை ஆற்றுகின்றது.

ம.தி.மு.க. ‘சங்கொலி’

எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போது ‘சங்கொலி’ வார ஏட்டை விட்டால், அரசியல் ரீதியான எதிர்க்கட்சி ஏடு வேறு ஏதுமில்லை. ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்பார்களே அந்தத் தகுதியில் திராவிடரியக்கப் பழங்கால பத்திரிகை உணர்வுகளோடு பீடுநடையிட்டு அது வந்து கொண்டிருக்கின்றது.

‘விடுதலை’, ‘உண்மை’ என்று தந்தை பெரியார் வளர்த்த ஏடுகளில் இப்போது இனமான சைவ உணவு வாசனைதான் மூக்கைத் துளைத்து ஊடுருவுகின்றது. அவை வீர சைவமாக இருந்தாலும் பரவாயில்லை. அதனால், அவை என்று பழைய