பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



29

சொற்பொருள் உச்சரிப்பை
தவறின்றி எழுதலாமே?

முதல் அமைச்சர் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில், அரசு திட்டங்கள் அறிவிப்புக் கூட்டங்களில் பத்திரிகையாளர்களை ஏன் புறக்கணிக்கின்றார் செல்வி ஜெயலலிதா என்பதற்கு, அவர் என்ன காரணம் கூறினார் என்பதைச் சிந்திக்கும்போது, நமக்கெல்லாம் மனவேதனை சுனாமி அலைகளைப் போலச் சுழன்றடிக்கின்றது? அப்படி என்ன அறிவித்து விட்டார் என்கிறீர்களா?

செல்வி. ஜெயலலிதா
கூறிய காரணம்!

‘செய்தி சேகரிக்க வருவோர்களுக்கு இங்லீஷ் தெரிந்தால் தமிழ் எழுத வரவில்லை; தமிழ் தெரிந்தால் ஆங்கிலம் சரியாகத் தெரியவில்லை. இதனால் ஒன்றுகிடக்க ஒன்று செய்தியாக வெளிவந்து குழப்பம்தான் உண்டாகின்றது’ என்றார்.

எவ்வளவு பெரிய இழுக்கு இது பத்திரிகைச் செய்தியாளர்களுக்கு என்று எண்ணிப் பார்ப்பவர்களுக்குத்தான் இந்த சுனாமி அலைகளது ஆபத்து புரியும். இது மட்டுமன்று.

செய்தியாளர்களில் பலருக்கு ‘ழ’ கர உச்சரிப்பே சரியாக சொல்லத் தெரியவில்லை. வாழை என்பதற்கு வாளை என்றும் பழம் என்பதற்கு பலம் என்றும், மதுரையை மருதை எனவும், குதிரையைக் குருதை எனவும் உச்சரிப்பவர்களும்: ‘ண’கர, ‘ன’-