பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

சொற்பொருள் உச்சரிப்பை தவறின்றி எழுதலாமே?


கர, ‘ள’ கர, ‘ல’கர, ‘ழ’கர பேத உணர்வுகைள உச்சரிக்கத் தெரியாதவர்களும் இன்றும் பத்திரிகைத் துறையில் இருக்கிறார்கள்.

அவர்கள் தென் மாநில சாதாரணமான மனிதர்களாக இருந்தால் பரவாயில்லை; பத்திரிகையாளர்களாக, செய்தியாளர்களாகப் பணி புரிகிறார்களே! அதனால்தான் அக்கறைப்பட வேண்டிய அவசியமுள்ளது. அவர்களைக் கூறித் தவறில்லை. இளமைக் காலக் கல்வியைக் கற்றுக் கொடுத்த ஆசான்களும், அத்தகையவர்களே காரணம், மண்மொழி மாண்பு அது!

செய்தியாளர்களாக வந்து விட்டதற்காக அவர்கள் Linguist பன்மொழி அறிஞராகவோ Lingulate என்ற ‘நா’ பல் ஒலி அறிந்தவராகவோ, Phonetics ஒலியியல் தெரிந்தவராகவோ, Phonetician ஒலியியல் வல்லுநராகவோ Lingual, ‘ட’கர, ‘ண’கர போன்று ‘நா’ விடைப் பிறக்கும் ஒலி நூலுணர்ந்தவராகவோ இருக்க வேண்டும் என்று நாம் சொல்லவில்லை; எதிர் பார்க்கவுமில்லை.

செய்தியாளர், ஆசிரியர் பணிகளுக்கு வந்த பிறகாவது, தமிழ் வல்லாரிடையே எழுத்தொலிப் பிறப்புகளைப் பற்றி, அவற்றை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதைக் குறித்துத் தெரிந்துக் கொள்ள வேண்டாமா? காரணம், பத்திரிகைத் துறை பணிகளாயிற்றே என்பது தான் நமது ஆசை! அதனால்தான் கூறுகின்றோம்.

எனவே, இப்படிப்பட்டவர்கள் செய்தியாளராகச் சென்று தவலை போயிற்று என்ற சொற்றொடர்களின் முதல் சொல்லில் ‘வ’ கரத்தை மறந்து விட்டால் என்ன குழப்ப வேதனைகள் சூழுமோ, அந்த நிலைச் செய்தியிலும் தன்னை மறந்து ஏற்பட்டு விடக்கூடாதே என்பதாலும், தமிழ்நாட்டில் ‘ழ’கர, ‘ண’கர ‘ல’கர, ‘ள’கர வித்தியாசங்கள் விநாச விளைவுகளை விளை வித்திடக் கூடாது என்பதாலும், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் புகார் தமிழ்ச் செய்தியாளர்கட்கும் நேர்ந்துவிடக் கூடாதே என்ற தொழில் அபிமானத்தாலும்தான், இந்தப் பகுதியை இங்கே அவர்கள் கவனத்துக்கு நிலை நாட்ட விரும்புகிறோம்! காரணம், நாமும் ஒரு மூத்த செய்தியாளன், பத்திரிகை ஆசிரியன், 55 ஆண்டுக் கால அனுபவம் உள்ளவன் என்பதால் இங்கே எழுதுகின்றோம்.