பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

சொற்பொருள் உச்சரிப்பை தவறின்றி எழுதலாமே?


இடத்தில் நான்கு முறை கண் இமைகளை மூடி மூடி திறக்கும் நேரம் நிறுத்த வேண்டும். அதுதான் மாத்திரை எனும் கால அளவு.

மற்ற நிறுத்தற் குறிகளுக்கு அளவு, முற்றுப் புள்ளிதான் மூல அளவை நேரம். அந்த மாத்திரை அளவைக் கொண்டுதான்

முக்காற் புள்ளி :

அரைப்புள்ளி ;

காற்புள்ளி,

ஆகிய நிறுத்தற் புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன.

இந்த முற்றுப் புள்ளியை வாக்கியம் முடிந்தவுடன் வைக்க வேண்டும். ஒருவர் முகவரி முடிக்கப்படும் இடத்தில் இடவேண்டும். சொற் குறுக்கங்களின் முடிவு. (திரு. இது திருவாளர் என்ற சொல்லின் குறுக்கம். இந்தக் குறுக்கம் முடிவில் (.) புள்ளியிட வேண்டும்.

ஒரு பெயரை எழுதும்போது, பெயர்களுக்குரிய முன்னெழுத்துக்களின் பின், எடுத்துக்காட்டாக கி.மா.கோ. ராஜன், நா.வா. கலைமணி என்று எழுதும் போது முற்றுப் புள்ளி மேலே வைத்திருப்பதைப் போல இடவேண்டும்.

முக்காற்ப் புள்ளி (:)

உட்பிரிவுகள், வகைகள், சிறு விளக்கங்கள், மேற்கோள்கள் போன்றவற்றிற்குரிய துணைத் தலைப்புகளுக்குப் பின் முக்காற்புள்ளி : இடப்பட வேண்டும். இதற்கு நிறுத்தும் கால அளவு மூன்று மாத்திரைகள். அதாவது மூன்று முறை கண் இமைக்கும் நேரம் கால அளவு. எடுத்துக்காட்டு :-

சமுதாயச் சீரழிவுக்குக் காரணங்கள் :
கலைஞரின் உரைச்சுருக்கம் :
தோல்விக்குரிய காரணங்கள் வருமாறு :