பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

361



அரைப்புள்ளி (;)

பல பயனிலைகள் ஒரு வாக்கியத்தில் வரும்போது முடிவாக வருகின்ற பயனிலையைத் தவிர, வாக்கியத்தினுள் வருகின்ற மற்ற பயனிலைகளுக்குப் பின் அரைப்புள்ளி இடப்படுகின்றது.

எடுத்துக்காட்டுகளும், குறிப்புரைகளும், குறிப்பெண்களும், எழுதப்படும்போது, கருத்தளவில் ஓர் உட்பகுதி முடிகின்ற இடத்திலும் அரைப்புள்ளி ஒரு வாக்கியத்தின் முடிவை அல்லது குறிப்புக்களின் முடிவைக் காட்டுவதன்று; தொடர்ந்து செல்லுகின்ற ஒரு கருத்தின் உட்பிரிவின் முடிவைக் காட்டுவது. இதற்குரிய கால அளவு இரண்டு மாத்திரைகள்.

எடுத்துக்காட்டு :-

1. சிவகவி முருகனை நோக்கிச் சென்றார்; அவரைப் பாடினார் : அருள் பெற்றார்; மற்றவர்கட்கும் வழிகாட்டினார்.

2. பலா வேர் விறகிற்கு ஆம்; மரப்பகுதி பலகைக்கும் ஆம்; கிளைகள் விட்டத்திற்கு ஆம்; பழம் உண்பதற்கு ஆம்.

காற்புள்ளி (,)

ஓரினத்தை அடுத்த பலவற்றை அடுத்தடுத்து எழுதும் போதும், எண், பெயர், முற்று, எச்சம் ஆகிய இடங்களில் பொருள் புரிவதற்காக நிறுத்தம் நிகழ வேண்டும் போதும், ஆனால், ஆதலால், ஆயின், மற்ற, என்பன போன்ற இடைச்சொற்களின்பின் நிறுத்தல் நிகழ வேண்டும் போதும், காற்புள்ளி வைக்க வேண்டும். காற்புள்ளி கால அளவு ஒரு மாத்திரை

எடுத்துக்காட்டு :-

1. சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகிய இவைகள் ஐந்தும் ஐம்பெருங்காப்பிய நூல்களாம்.

2. திருக்குறளில் ‘133’ அதிகாரங்களும், திருவள்ளுவர் பெருமானால் எழுதப்பட்டவை.

3. அன்பும் அருளும், பண்பும் அன்பும், சுத்தமும் அசுத்தமும், விண்ணும் மண்ணும், திருக்குறள் நூலில் பின்னிக்