பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

சொற்பொருள் உச்சரிப்பை தவறின்றி எழுதலாமே?


கிடக்கின்றன. ஆனால், வீடுபேறு இல்லையே, என்று ஆன்மீகிகளில் பலர் கூறுகின்றார்கள்.

கேள்விக் குறி?

கேள்வியைச் சுட்டிக் காட்டும் வாக்கியத்தின் கடைசியில் வினாக்குறி போடப்படுகின்றது. இதற்குரிய கால அளவும் முற்றுப் புள்ளியைப் போலவே நான்கு மாத்திரைதான். ஆனால், கேள்வி கேட்பவன் தான்பேசும்போது, அந்தக் கேள்விக்குப் பதில் எதனையும் பிறரிடமிருந்து எதிர்பார்க்காமல் பேசுகின்ற நிலையில்தான் - இந்தக் குறிக்கு இவ்வளவு மாத்திரை நேரம் உரியது. விடை எதிர்ப்பார்க்கப்பட்டதாயின், இதற்கு மாத்திரை அளவு இல்லை.

எடுத்துக்காட்டு :-

1. யானோ அரசன்? யானே கள்வன்?

2. எட்டுத் தொகை நூல்கள் எவை?

ஆச்சரியக் குறி!

இகழ்வின் கண்ணும், உயர்வின் கண்ணும், விளியின் கண்ணும் வியப்புத் தோன்ற வருகின்ற சொல்லின் அல்லது சொற்றொடரின் இறுதியிலும் இந்தக் குறி வைக்கப் படுகின்றது. இதற்கும் நான்கு மாத்திரையே அளவு என்றாலும், முற்றுப் புள்ளியைப் போலவே நான்கே மாத்திரைதான் என்ற அளவு இல்லை.

எடுத்துக்காட்டு :-

தேரா மன்னா! செப்புவ துடையேன்!
யானே கள்வன்!
கண்டேன் கற்பினுக் கணியைக் கண்களால்!
தீ! தீ! தீ!

மேற்கோள் குறி “–”, ‘–’

ஒருவர் கூறிய சொல்லை மேற்கோளாகக் காட்ட வேண்டுமென்றால், மேற்கோள் குறிகள் இடப்படுகின்றன. கட்டுரை-