பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



30

அச்சுப்படி திருத்துதலும்
அவற்றுக்கான குறியீடுகளும்

ரு பத்திரிகையிலுள்ள பணிகளில் அச்சுப்படி Proof Reading திருத்துதல், முக்கியமான தலையாயப் பணியாகும். ஒரு பத்திரிகையில் அச்சுப் பிழைகள் வராமலிருந்தால்தான் அதைத் தரமுள்ள பத்திரிகை என்று மக்கள் மதிப்பார்கள்.

அச்சுப் பிழைகள் மலிந்து காணப்படுமானால், அவை வாசகர்களிடையே மிகப் பெரியக் குழப்பத்தையும், அனாவசியமான வம்படி வழக்குகளையும், அதனால் பத்திரிகை விற்பனையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, மக்களிடம் அனர்த்தங்களையும் உருவாக்கிவிடும்.

எடுத்துக்காட்டாக :- இந்தச் சம்பவத்தை பிழைதிருத்துவோரும், பத்திரிகை உரிமையாளரும் அதன் ஆசிரியரும் மனத்தில் நிறுத்துவது நல்லது.

ஓர் ஆளும் கட்சித் தலைவர், ஏறிவந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் தனது தலையில் எண்ணெயில்லாமல், பரட்டை தலையுடன், அழுக்கு அடை அடையாகப் படிந்திருந்த கிழிந்த சட்டையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.

இரயிலில் வந்த அந்தத் தலைவர் அவன்மீது இரக்கப் பட்டு, அவனுடைய தோற்றத்தைக் கண்டு அவனை அழைத்து,