பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டி கார்ல் மார்க்ஸ்!


செய்து கொள்வதற்காகவும் பத்திரிகையை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது”

“எவன் ஒருவன் பணம் கொள்ளை அடிக்கப் பத்திரிகையைப் பயன்படுத்துகிறானோ, அவன் தண்டிக்கப்பட வேண்டியவன். ஏனென்றால், அவன் வணிக நோக்கங்களுக்கு அடிமையாகி விடுகிறான்” என்ற பத்திரிகை இலட்சியங்களைக் கொண்டவர் மார்க்ஸ். அதனால்தான் எனது ஆசிரியர் பதவியை விட்டு விலகினேன்” என்றார். அவர் ஆசிரியர் பதவியை விட்டு விலகியதும் விற்பனைக் குன்றியது. பிறகு பத்திரிகை நிறுத்தப்ப்ட்டு விட்டது.

நிறுத்தப்பட்ட பத்திரிகையை பற்றி அவர் ஒரு மேடைப் பேச்சில் மக்களுக்கு விளக்கம் தந்தார். அந்தப் பேச்சு இது :

“ஒரு பத்திரிகை நின்று விட்டது என்றால் என்ன பொருள்? சுயமாகச் சிந்திப்பவர்களுக்கும், மக்களுக்காகப் போராடுகிறவர்களுக்கும் இனி ஜெர்மனியில் இடம் கிடையாது என்பது தானே?”

“மக்களுக்கு அவர்களுடைய நிலைமைகளை எடுத்துக் கூற வேண்டும் என்றால், மக்களோடு பத்திரிகை எராளமாகப் பேச வேண்டாமா? அவ்வாறு பேசிட உரிமை வேண்டாமா?”

“அந்த உரிமை இல்லையென்றால் மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கூறிக் கொள்வதில் என்ன பயன்?”

“ஓர் அரசின் தயவில் இருந்து கொண்டு மக்களுக்காக உழைக்கிறோம் என்பதெல்லாம் வெறும் பாசாங்கு! ஏமாற்று வித்தை!” என்றெல்லாம் சற்று விரிவாகவே முழக்கமிட்டார் மார்க்ஸ்.

வேறொரு மேடையிலே பத்திரிகைச் சுதந்திரம் பற்றி மார்க்ஸ் பேசும்போது :

“பத்திரிகைக்கு சுதந்திரம் வழங்குகிறோம் என்று ஓர் அரசு கூறிக்கொண்டு, அதனை வளரவிடாமல், அரசைத் தட்டிக் கேட்க உரிமை வழங்காமல், கீழறுப்பான் வேலைகளைச் செய்வது மகா கேவலம்; வெளி வேஷம்; முட்டாள் தனம்!