பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

பத்திரிகைகள் தோன்றும் முன்பு செய்திகள் எப்படிப் பரவின




ரோமாபுரி மக்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தவர்; நாவன்மை படைத்த பேச்சாளரான சிசிரோ என்பவர்தான் என்ற செய்தி மற்ற நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிடிவாதக் கொள்கை என்ற Dogmatism தத்துவம்; உலகப் புகழ் பெற்ற ஒரு செய்தியாகவே மதிக்கப்பட்டது. இன்பம் - துன்பம் என்ற இரண்டையும் சமநோக்கில் காண வேண்டும் என்பதையும்; தனி மனிதன் ஒழுக்கம், திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட கருத்து, Notion அறிவுணர்வு, முடிவின்மை infinity போன்ற செய்திகளை அவரால் உலகுக்கு வழங்கப்பட்டன.

சிசிரோவின் சொல்லாற்றல் மிக்கப் பேச்சுக்கள் இன்றும் உலகப் பள்ளிகளில் போதிக்கப்படுகின்றன. இவரது கடித இலக்கியங்கள் வரலாற்று உண்மைகள் கொண்டவை ஆகும்.

புளூடார்க் Plutarch என்ற வரலாற்றுப் பேராசிரியர் எழுதிய நூல்களில் கிரேக்க, ரோமானிய அரசியல் மேதைகளின் செய்திகள் ஏராளமாகக் குவிந்துக் கிடக்கின்றன.

ரோமானியப் பேரரசிற்குட்பட்ட நாடுகளில் அமைதி நிலை நாட்டப்பட்ட செய்தியை உணர்ந்த பிரிட்டிஷ் பேரரசு 19-ம் நூற்றாண்டில் ரோமானிய அமைதியைப் பின்பற்றி தங்களது குடியேற்ற நாடுகளிலும் அமைதியை நிலை நாட்டியது.

இன்றும் கூட பத்திரிகைகளில் குறிப்பிடப்படும் ‘எல்லா சாலைகளும் ரோமுக்குச் செல்கின்றன (All Roads Lead to Rome) என்பதற்கேற்ப, ரோம் நாட்டின் ஒவ்வொரு மாநில எல்லா நகரங்களும் ரோம் நகரத்துடன் சாலைகளால் இணைக்கப்பட்டன என்ற ஆட்சிச் சீரமைப்புச் செய்திகள் அன்றும் இன்றும் உலகப் பிரசித்தப் பெற்றதாகும்.

கி.மு. 6-ம் நூற்றாண்டில் ரோமாபுரியை ஆட்சி செய்த எட்ரூசியன் Etrusean என்பவன் கட்டட கலைக்கு ஆதரவு அளித்ததால், ஜூபிடர் கடவுளின் கோவிலான கேபிட்டல் திருக்கோவிலை (Capital) பிற்காலத்தில் கட்டி முடித்தார்கள் - ரோமானிய அரசர்கள். ரோமர்களின் இந்தக் கட்டிடக் கலை