பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டி கார்ல் மார்க்ஸ்!


நம்பிக்கையைத் தகர்த்தெறியும் அணுகுண்டுகளாக இருந்தன. ஜெர்மன் மன்னன் நான்காம் ப்ரடெரிக் வில்லியம் என்பவனைப் பிற்போக்குவாதி என்று அந்தக் கட்டுரைகள் விமர்சனம் செய்தன.

அரசு அதிகார அம்புகள் மார்க்ஸ் மீது பாய்ந்தன. பாரீஸ் நகரத்தை விட்டே ஓட வேண்டும் என்று ஃபிரெஞ்சு அரசு உத்தரவிட்டது. உடனே மார்க்ஸ் பெல்ஜியம் நாட்டிலுள்ள ப்ரசெல்ஸ் நகருக்கு ஓடினார்.

பத்திரிகை ஆசிரியர் சுதந்திரத்தைக் காக்கவும், மக்கள் உரிமைகளை அரசுக்கு எடுத்துக் கூறவும், மாவீரன் கார்ல் மார்க்ஸ் சொல்லொணா வேதனைகளை அனுபவித்து வாழ்ந்து காட்டிய மேதை ஆவார்.

அவர் பத்திரிகைத் துறைக்கு ஒரு குரு, முன்னோடி, வழிகாட்டியாக உலகுக்குத் திகழ்ந்தவராவார்.

புலவர் என்.வி. கலைமணி