பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

பாரதியார் தமிழ்ப் பற்று பத்திரியைாளரிடம் மணக்க வேண்டும்



      “புத்தம்’புதிய கலைகள் - பஞ்ச
           பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
      மெத்த வளருது மேற்கே - அந்த
           மேன்மைக் கலைகள் தமிழினில்லை
      சொல்லவுங் கூடுவதில்லை அதைச்
           சொல்லுந் திறமை தமிழ்மொழிக்கில்லை
      மெல்லத் தமிழினிச் சாகும் -
           அந்த மேற்கு மொழிகள் புவியிசை ஓங்கும்”
      என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
           இந்த வசை எனக்கெய்திட லாமோ
      சென்றிடுவீர் எட்டுத் திக்குங் - கலைச்
           செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!”

- என்ற பாடலைச் சுப்பிரமணிய பாரதியார் பாடிக் காட்டியதைக் கண்டு - நாவலரும், அடிகளும் மெய் மறந்தார்கள். இந்தத் தமிழ் உணர்ச்சி என்று தமிழிரிடம் எழுச்சி பெறுமோ! என்று, மறைமலை அடிகள் கவிஞர் பாரதியாரை உணர்ச்சி உந்தப் பாராட்டினார்!