பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
35
பத்திரிகையாளர்களுக்கு
‘திரு.வி.க. தமிழ்நடை அனுபவங்கள்’

பாரதியாருக்கு அடுத்தப்படியாகப் பத்திரிகை உலகில் புரட்சி செய்து, தீந்தமிழுடன் தேசிய உணர்வைக் கலந்து ஊட்டியவர் திரு.வி.க. ‘தெய்வமிகழேல், தக்கார் நெறிநில், தேசத்தோடொத்து வாழ்’ என்ற வாசகங்களை ஒரு வட்டத்தில் சுற்றி வரைந்து, நடுவே இந்திய நாட்டுப் படமும், சென்னை நகர் அமைந்த இடத்தில் ஒரு விண்மீனும் பொறித்த இலச்சினைச் சின்னத்தைத் தாங்கி, திரு.வி.க.வின் ‘தேசப்பக்தன்’ 7.12.1917 அன்று தோன்றியது. இரண்டரை ஆண்டுகள் தேசபக்தனின் ஆசிரிய பீடத்திலிருந்து திரு.வி.க. எழுதிய கட்டுரைகள் ‘தேசபக்தாமிர்தம்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு, முதல் மலர் 1919-இல் வெளியிடப்பட்டது. அந்த தமிழ்நடை, பத்திரிகையாளருக்கு ஓர் எடுத்துக்காட்டு. இதோ அந்த தமிழ்நடைகள்.

‘பண்டைத் தமிழ் மக்கள்’ உரை நடையில் எனக்குப் பெரும் பற்றுண்டு. பிறமொழிக் கலப்பின்றித் தமிழ்பேசல் வேண்டும், எழுதல் வேண்டுமென்னும் ஆர்வம் எனக்குண்டு. அப்பற்றும் அவ்வார்வமும் என்னளவில் கட்டுப்பட்டுக் கிடப்பதை நோக்குழி, வீட்டின்பத்தில் வெறுப்பும், தமிழ்