பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



37
வடசொல் நீக்கி, தனித் தமிழ் எழுதிட:
மறைமலையடிகளாரின்
மொழி ஆய்வுக் கட்டுரை!


ரு மொழியில் பிற மொழிகள் எவ்வாறு கலக்கின்றன, என்று பார்த்தால், பிறமொழியாளர்களுடன் பழுகுவதனாலும், பிறமொழிகளைப் பேசுவதாலும், ஒரு மொழியில் பிறமொழிச் சொற்கள் கலக்கின்றன என்பதை அறியலாம்.

இவ்வாறு கலத்தல் கடலில் காயங் கரைத்ததுபோல, எம்மொழிக்கும் தீங்கு செய்வதில்லை. நம்மை அடுத்துள்ள மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆய மொழிச் சொற்கள் தமிழில் எவ்வளவு கலந்துள்ளன? மிக மிகக் குறைவே. இல்லை என்றுகூடச் சொல்லலாம். அவ்வளவு குறைவு.

ஆனால், அரசியல் பொது மொழிகளாக அல்லது ஆணை மொழிகளாக ஓர் மொழி பிற மொழிகளிற் கலந்தால், அயன் மொழிச் சொற்கள் ஏராளமாய்த் தாய்மொழிகளில் கலந்து விடுகின்றன.