பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38
வள்ளலார் இலக்கண நுட்பம்
ஆசிரியர் குழுவுக்கும் தேவை!

(தமிழ் எண் இலக்கணப் பயிற்சிக் கட்டுரை)




ள்ளலார் இயற்றியுள்ள பாடல்களிலும், உரை நடைப் பகுதியிலும் உள்ள சிற்சிலக் கருத்துக்கள் எளிதில் புரியத் தக்கவையாக இல்லை. இக்காரணமாகச் சிலர் முரண்பாடான கருத்துக்களைச் சொல்லுகிறார்கள். இதற்கு முடிவு காண்பது நன்று. பார்க்குமிடத்து அத்தகையக் கருத்துகளில் சில உண்மை புலப்படும். ஒவ்வொருவரும் தமிழ் எண் இலக்கண அறிவு பெற இதுபோன்ற கட்டுரையைப் படிப்பது சிறந்த அனுபவமாகத் திகழும்.

எடுத்துக்காட்டு :

‘உபதேசம்’ என்ற தலைப்பிலுள்ள வள்ளலாருடைய கருத்துக்கள் பலவற்றில் ஒன்று தொல்காப்பியத்தில் “தொண்ணுறு”, “தொள்ளாயிரம்” என்ற இரு தொடர்கள். இந்த இரண்டுக்கும் அவரால் கூறப்பட்ட இலக்கணம் இது.

இந்த இரு தொடர்களுக்கும் தொல்காப்பியத்தில் வகுக்கப்பட்ட இலக்கணம் “முழுவதும் குற்றமே” என்று வள்ளலார் குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியம் இயற்றப்பட்ட கால்த்தில் நடைமுறையில் இருந்த வடமொழி இலக்கண நூல் ‘ஐந்திரம்’ என்பதாகும்