பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

401


என்று தொல்காப்பியச் சூத்திரத்தை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

இத்தகைய ஒரு மதிப்பைத் தொல்காப்பியம் இலக்கண நூல்மீது கொண்டிருந்த வள்ளல் பெருமான், ‘தொண்ணூறு, ‘தொள்ளாயிரம்’ என்ற சொற்றொடர்களுக்கு தொல்காப்பியத்தில் உள்ள இலக்கணத்துள் எப்படித் தவறு கண்டார் என்பதைப் பார்ப்போம்.

ஒன்பது என்னும் சொல்லும், பஃது (பத்து) என்னும் சொல்லும் சேர்ந்து வரும் முறையில் (9x10) தொண்ணூறு என்று மாறுவதைத் தொல்காப்பியச் சூத்திரம் கூறுகிறது.

                      “ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
                       முந்தை யொற்றே ணகாரம் இரட்டும்
                       பஃதென் கிளவி ஆய்த பகரங் கெட
                       நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
                       ஒற்றிய தகரம் றகர மாகும்”

- தொல் : எழுத். 45

ஒன்பது, பஃது என்னும் சொற்கள் ஒன்றாகச் சேரும்போது, ‘த்’ என்னும் மெய்யெழுத்துத் தோன்ற, அதன்மீது ‘ஒ’ என்னும் உயிரெழுத்து அமைகிறது.

‘ஒ’ என்னும் எழுத்து இருந்த இடத்தில், அவ்வகையில் ‘தொ’ என்னும் உயிர்மெய் எழுத்து ஏற்படுகின்றது.

பின்னர், ‘ன்’ என்னும் மெய் எழுத்து ‘ண்’ என ஆவதுடன், அது இரட்டிக்கிறது.

எனவே, ‘ண்’ண், என்னும் இரண்டு எழுத்துக்கள் தோன்றுகின்றன. இப்போது, ‘தொண்ண்’ என்ற மூன்று எழுத்துக்கள் கிடைக்கின்றன.

இதன் பிறகு, ‘ஊ’ என்னும் உயிர் எழுத்து தோன்றுகிறது. இதனால், ‘தொண்ணூ’ என்பது ஏற்படுகிறது. அதே சமயத்தில் வேறு மாறுபாடுகளும் ஏற்படுகின்றன.

நிலைமொழியிலுள்ள ப,ஃ எழுத்துக்கள் மறைய, எஞ்சிய எழுத்து ‘து’ என்பதாகும். இதிலுள்ள ‘உ’ என்னும்