பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

வள்ளலார் இலக்கண நுட்பமும் தேவை!


உயிர் எழுத்து மட்டும் நின்று, ‘த்’ என்னும் மெய் எழுத்து ‘ற்’ என்னும் மெய்யெழுத்தாய் மாறிய பின்னர், அதற்கேற்ப ‘ற்’ என்பதன் மீது ‘உ’ எழுத்து அமைந்து ‘று’ என ஆகிறது. இவ்வகையில் தொண்ணூறு என்னும் சொற்றொடர் ஏற்படுகிறது.

இனி, ‘தொள்ளாயிரம்’ என்பதற்குத் தொல்காப்பியம் சூத்திரம் என்ன கூறுகின்றது என்பதைப் பார்ப்போம்.

                      ‘ஒன்பான் முதனிலை முந்து கிளர்ந்தற்றே
                       முந்தை யொற்றே ளகாரம் இரட்டும்
                       நூறென் கிளவி நகாரம் மெய்கெட
                       ஊ ஆ வாகும் இயற்கைத் தென்ப
                       ஆயிடை வருதல் இகார ரகாரம்
                       ஈறுமெய் கெடுத்து மகர மொற்றும்’

- தொல் : சொல் : 463

‘ஒன்பது, ‘நூறு’ என்னும் இந்த இரு சொற்களும் சேர்ந்து எவ்வாறு தொள்ளாயிரம் என மாறுகின்றன என்ற விவரத்தை இந்தச் சூத்திரம் கூறுகிறது.

முன் சூத்திரத்தில் 445-வது எழுத்ததிகார சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி ‘த்’ என்னும் மெய் எழுத்து ‘ஒ’ என்னும் உயிர் எழுத்துடன் சேர்ந்து ‘தொ’ என அமைகிறது.

பின்னர் அடுத்துள்ள, ‘ன்’ என்னும் எழுத்து ‘ள்’ என மாறுவதுடன் இரட்டிக்கிறது. இப்போது ‘தொள்ள்’ என்ற அமைப்பு ஏற்படுகிறது. பின்னர் வருமொழி ‘நூறு’ என்பதிலுள்ள முதலெழுத்து ‘நூ’ என்பது.

இதில் ‘ந்’, ‘ஊ’ என்னும் இரண்டெழுத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றில் ‘ந்’ என்னும் மெய் எழுத்து மறைந்து விடுகிறது. எஞ்சியுள்ளது ‘ஊ’ என்னும் உயிர் எழுத்தாகும். இது ‘ஆ’ என மாறுகிறது.

பின்னர் ‘இ’, ‘ர’ என்னும் இரண்டு எழுத்துகள் தோன்றுகின்றன. ஈற்றில் உள்ள எழுத்தும் கெடுகிறது.

எனவே, நிலைமொழியும் வருமொழியும் ‘தொள்ள’ xஆ இ, ர, ம் என மாறுகின்றன. வருமொழியில் அடுத்தடுத்து வரும் ஆ இ என்னும் எழுத்துகள் இடையே ‘ய்’ என்னும் உடம்படு