பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

403


மெய் வருகிறது. இந்த வகையில் ‘தொள்ளாயிரம்’ என்னும் சொற்றொடர் அமைகின்றது.

ஆனால், நச்சினார்கினியர் உரையுடன் கூடிய தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு அடிக்குறிப்பு எழுதியுள்ள புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள், தொல்காப்பியத்திலுள்ள இந்த இரண்டு நூற்பாக்களின் முடிவு, ‘எவ்வகையிலும் பொருந்தாது’ என்கிறார்.

திரு. பாவாணரது கொள்கை வள்ளல் பெருமான் எடுத்துக் காட்டிய கருத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஒன்பது என இப்போது நாம் கூறி வரும் எண், பண்டைக் காலத்தில் ‘தொண்டு’ என வழங்கி வந்ததாகவும், ஆனால், அது தொல்காப்பியர் காலத்தே வழக்காறற்று விட்டதாகவும், அவர் காலத்திற்கு முன் ‘9’ என்பது தொண்டு எனவும், 90 என்பது தொண்பது எனவும், 900 என்பது தொண்ணூறு எனவும், 9000 என்பது தொள்ளாயிரம்’ எனவும் வழங்கி வந்ததாகவும், தொண்டு என்ற சொல் மறைந்து விடவே, அதற்கு தொண்பது என்பதையும், 90 என்னும் எண்ணுக்குத் தொண்ணூறு என்பதையும், 900 என்பதற்குத் தொள்ளாயிரம் என்பதையும், மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர் எனவும் பாவாணர் கூறுகின்றார்.

ஆனால், பத்திலிருந்து ஒன்று குறைந்த காரணமாக, ஒன்பது என்னும் சொல் அமைந்ததாகச் சொல்லப்படும் கருத்தை பாவாணர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு அவர் கூறும் காரணமும் உள்ளது.

பத்தில் ஒன்று குறைந்தது ஒன்பது என்றால், அதே முறை தொண்ணூறு தொள்ளாயிரம் என்னும் சொற்றொடர்களுக்கும் பொருந்த வேண்டும். ஆனால், இந்த முறை இந்த சொற்றொடர்களுக்குப் பொருந்துவதில்லை. ஆதலால் அவர்

தொண்டு + பத்து தொண்பது எனவும்,
தொண்டு + நூறு தொண்ணுறு எனவும்
தொண்டு + ஆயிரம் தொள்ளாயிரம்

எனவும் கொள்வது முறை எனக் கூறுகிறார்.