பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

39



மக்களிடம் நாள்தோறும் உபதேசிப்பதையே வழக்கமாகக் கொண்ட கன்ஃபியூசியஸ்; ‘மற்றவர்கள் உனக்கு எதைச் செய்யக் கூடாது என்ற நினைக்கிறாயோ: அதனை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே “What you do like, .When done to yourself do not do other” என்ற அவரது செய்தி மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்றதாம். இந்தக் கருத்தை அவரது The Book of History என்ற நூலிலிருந்து எடுத்து மற்ற நாடுகளும் செய்தியாகப் பிரச்சாரம் செய்தன.

கி.மு. 372 முதல் 289 வரை வாழ்ந்த தத்துவஞானி Laotza லா ஓட்சா என்பவர், ‘டாவோயிசம்’ Tao என்ற தத்துவத்தை மக்களிடம் நேரிடையாக விளக்கிப் பேசும்போது, ‘இயற்கைக் கொள்கை வல்லமை வாய்ந்தது. அந்தக் கொள்கை இயற்கை அழகு வாய்ந்தது. மக்களுக்கு அது நன்மை தரக்கூடியது ஆகையால், இயற்கை வாழ்வை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற செய்தியை லா ஓட்சா பரப்பினார். எனவே சீன தத்துவம் ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுத்தது.

பழங்காலத்தில் இருந்தே இந்தியரின் சநாதன சமயம் இமயம் முதல் குமரி வரை இயங்கி வந்ததை, இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த தத்துவஞானி டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் ‘இந்து சமயம் தொடர்ந்து நீடிக்கும் ஓர் இயக்கம். தேங்கிவிட்ட நிலை அன்று, என்றும் இயங்கும் ஒரு முயற்சி. முடிந்து விட்ட முறை அன்று, வளர்ந்து வரும் ஒரு பண்பு. நின்றுவிட்ட தேற்றம் அன்று, என்பதை வலியுறுத்தும் செய்தியாக அவர் உலகுக்கு வெளியிட்டார்.

‘ஆரியர்கள் பேசிய முதல் வார்த்தை ரிக் வேதமாகும்’ என்ற செய்தியை ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ் முல்லர் கூறுகிறார்.

மன்னர்களுக்கு ஆலோசனை கூறும் சபாக்கள் இரண்டு இருந்தன. ஒன்று சபா, மற்றொன்று சமிதி. சபா பிற்காலத்தில் நீதிமன்றமாகச் செயல்பட்டது என்றும், சபாவை விட சமிதி முக்கியமானதென்றும், அது மக்கள் சார்பாளர்களையும், அல்லது மக்கள் அனைவரையும் கொண்ட ஓர் அமைப்பு என்ற