பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

வள்ளலார் இலக்கண நுட்பமும் தேவை!



எனவே, பத்திரிகை ஆசிரியர் குழுவில் திறம் வாய்ந்த ஓர் இலக்கண வித்தகரை நியமித்துக் கொள்வது பத்திரிகைக்கும் நற்பெயரை நடமாட விடும்.

ஏனென்றால், இலக்கியம், இலக்கணம், கலை வித்தகம், சிறந்த கவிதை ஆற்றல், திறனாய்வாண்மை திறம், அறிவியல் அற்புதங்கள் அறிந்த தெளிவு, புறநானூற்று வீர விளையாடல்களை விளக்கி எழுதும் விந்தை ஆய்வு, அனைத்தும் ஒரு பத்திரிகை நடத்தும் குழுவில் இருந்தால் அது சகலகலா வல்லமை பலம் பெற்ற இதழ் என்றும் ‘இந்து, தினமணி’போல புகழ்க் கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டே இருக்குமல்லவா?