பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

பத்திரிகைகள் தோன்றும் முன்பு செய்திகள் எப்படிப் பரவின!


செய்தியை டாக்டர் ஜெயஸ்வாஸ் என்ற மொழி அறிஞர் அறிவித்துள்ளார்.

‘ரிக் வேத காலத்தில் அரசியல், சமுதாய வாழ்க்கையின் அடிப்படையாகக் குடும்பம் விளங்கியது. ஆரியர்கள் கூட்டுக் குடும்ப முறையை அமைத்துக் கொண்டார்கள் என்று வரலாற்று அறிஞர் வின்சென்ட் ஸ்மித் ஆராய்ந்து கூறுகிறார்.

கெளதம சித்தார்த்தர் போதி மரத்தடியில் மெய்யறிவு பெற்ற பிறகு, காசி நகர் அருகே உள்ள சாரநாத் என்ற இடத்தில் உள்ள மான் வனம் Deer Parkல் அவர் முதன் முதலாகத் தனது சமய உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் நான்கு சிறந்த ஞானநெறிகளை மக்களுக்குக்கு எடுத்துக் கூறினார்.

1. துன்பம், வருத்தம், நோய், மூப்பு, சாவு ஆகியவை நிறைந்த மக்கள் வாழ்க்கை எளிதில் விவரிக்க முடியாத துன்பம் நிறைந்தது என்ற செய்தியை அறிவித்தார். 2. இந்த துன்பங்களுக்குக் காரணம் சிற்றின்பம். 3. இந்த துன்பங்களை ஒழிக்க ஆசையை ஒழிக்க வேண்டும். 4. ஆசை ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அட்ட சீலம் என்ற எட்டு நன்னெறிகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற செய்திகளை உபதேசித்தார்.

அட்ட சீலம் என்பதற்குப் புத்தர் விளக்கம் அளித்த போது, மேற்கண்ட நான்கு உண்மைகளில் மக்கள் முழு நன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற செய்தியை அவர் பரப்பினார்.

சிற்றின்பத்தை அகற்றிடவும், கோபத்தைத் தடுக்கவும், மற்றவர்களுக்குத் தீமை செய்யாதிருக்கவும் வேண்டும்.

பயனற்றதும், கடுமையானதும்; பொய்யானதுமான கடுமை நிறைந்த சொற்களைப் பேசாதிருக்க வேண்டும். எப்போதும் இன்சொற்களையே பேச வேண்டும்.

மற்றவர்களைத் துன்புறுத்தாமலும், திருட்டுக் குற்றத்தைச் செய்யாமலும், நல்ல நெறிகளுடன் நடக்க வேண்டும்.