பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

பத்திரிகைகள் தோன்றும் முன்பு செய்திகள் எப்படிப் பரவின!


செய்திகளாகக் கூறுகிறார்கள். புத்தர் கி.மு. 487ம் ஆண்டில் மறைந்தார்.

புத்தருக்குப் பிறகு கி.மு. 539-ம் ஆண்டில் தோன்றிய மகா வீரர் நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை என்ற மூன்று கொள்கைகளை ‘மும்மணிகள்’ என்ற செய்திகளாக மக்களுக்குப் போதித்தார். மகா வீரர் கொள்கைகளை அவருடைய பதினோரு சீடர்களும் சமண சமய கோட்பாடுகள் என்ற பெயரில் பதினான்கு இயல்களாகப் பிரித்துச் செய்திகளாக வெளியிட்டார்கள்.

சமணர்கள் இந்தியாவின் பல்வேறு மொழிகளைக் கசடறக் கற்று, எந்தப் பகுதிக்குச் சென்றாலும், மக்களிடையே அவரவர் மொழிகளிலே சமண கொள்கைச் செய்திகளை பரப்பினார்கள். இவர்களது சமயத் தொண்டுகளால் தமிழ் மொழியில், சிலப்பதிகாரம், நன்னூல், சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி போன்ற நூல்களில் சமணத்தைச் செய்திகளாக எழுதித் தொண்டாற்றினார்கள்.

எந்தெந்த மொழிகளைக் கற்றுச் சமணர்கள் வல்லுநர் ஆனார்களோ, அந்தந்த மொழிகளில் சமணக் கொள்கைகளைச் செய்திகளாக்கி, இலக்கண்ம், உரை நடை, காப்பியம், அகராதி, தத்துவக் கருத்துக்கள், குறியீட்டு முறைகள், கணிதம் போன்ற நூற்களை எழுதும் பெரும் புலவர்களாகி சமண சமயத் தொண்டாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கச் செய்திகள் ஆகும்.

கற்றூண்கள், கல்லால் செதுக்கப்பட்ட குடை போன்ற அமைப்புகள், வளைவுகள் நிறைந்த கோவில்கள், பாறைக் குகைக் கோயில்கள், சரவண பெலகோலா கோமதீஸ்வரர் கோவில், மைசூர் கார்கால்பதி ஆலயம், மத்தியப்பிரதேச காஜூராகோ திருக்கோவில், பாவபுரி கோயில்,இராஜஸ்தான் அபுகுன்று சலவைக் கோயில், சிற்பங்கள், கிழக்கு வங்க ரிஷபநாதர் சிலை, மராட்டிய எல்லோர குகைக் கோவில், ஒரிசா ஹதிகும்பா குகைக்கோயில், மத்தியப் பிரதேச உதயபுரி மலைக் குகைக் கோயில், அங்குள்ள சிற்பங்கள், ஜூனார்,