பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

43


ஆஸ்மானாபாத் குகைகளைக் குடைந்து அமைந்துள்ள சிற்பங்கள், பிரார்த்தனைக் கூடங்கள், தர்மசாலைகள் அமைத்திருத்தல், சித்தூர் சமணக் கோபுரம் போன்ற மேலும் எண்ணற்ற இடங்களில் கட்டப்பட்டுள்ள புனிதத் தலங்கள் போன்ற கொடைச் செயல்கள் எல்லாம் சமணர்களின் கலைத்திறன்களுக்கான செய்திகளாக இன்றும் காட்சி தருகின்றன.

இந்திய வரலாற்றில் சமண தத்துவங்கள் இன்றும் அழியாமல் : அதன் ஒவ்வொரு வேலைப்பாடுகளும் சமணர்களின் சிறப்பான, அற்புதமான செய்திகளாகத் திகழ்ந்து புகழ் பரப்பிக் கொண்டிருக்கின்றன. பத்திரிகைகள் இல்லாத காலத்தில் தோன்றிய அற்புதச் செய்திகள் அல்லவா இவை? வரலாறு மறக்க முடியாத, மறுக்க முடியாத அழியாச் செய்திகள் தானே இவை எப்படி மறக்க முடியும்?

புத்த சமயத்தில் சங்கங்கள் இருந்தன - சித்தார்த்தர் சித்துக்களை உலகெங்கும் பரப்பிட! ஆனால், சமணத்தில் அத்தகைய சங்கங்கள் ஏதும் இல்லை என்றாலும், கல்மேல் எழுதப்பட்ட எழுத்துக்களைப் போல கற்கோயில்கள், கற்சிற்பங்கள், கல் ஒவியங்கள், கற்றூண்கள், கற்குகைக் கல்வெட்டுகள் இருக்கின்றன. சமணத்தின் செய்திகளை உலகெங்கும் பரப்பிட, உணர்த்திட, உரைத்திட இவை அல்லவா பத்திரிகைச் செய்திகளைவிட அழியா செய்திகள்?

எனவே, உலகத்தில் பத்திரிகைகள் தோன்றுவதற்கு முன்பு ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த மக்கள் வாழ்க்கையில் ஏராளமான செய்திகள் தோன்றிக் கொண்டுதான் இருந்தன.

அவற்றை வெளியிடப் பத்திரிகைகள் இல்லையே தவிர, மக்கள் போக்குவரத்துகள் மூலமாக: அந்தச் செய்திகள் வாய்மொழி வழிகளாலும், கல்வெட்டு, கற்சிற்பங்கள், கற்பாறைச் செதுக்கல்களைக் காட்சிகளாக மக்கள் பார்த்தவைகளாலும்; அறிஞர்கள் தொகுத்து எழுதிய சிந்தனைகளை நூல்களில் படித்துணர்ந்தவர்களாலும், நூல்களை எழுதிய அறிஞர்களே நடைப் பயணமாக ஊரூருக்குச் சென்று மக்களுக்கு எடுத்துக் கூறிய முறைகளாலும் அந்தச் செய்திகள்