பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்



அந்த இங்லீஷ் அகராதி News Paper என்ற சொல்லுக்கு தருகின்ற விளக்கத்தில், “செய்தித்தாள் என்று கூறுவதற்கான முன்மாதிரி இதழ்கள் 17-வது நூற்றாண்டுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் ஆட்கள் மூலமாக நேரடியாக வழங்கப்படும் News Letters, News Pamphlets என்ற பழக்க வழக்க முறைகள்தான் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளது.

ஆட்கள் மூலமாக மக்களுக்குச் செய்திகள் வழங்கப்படும் இவை போன்ற முறையை; பர்டன் என்பவர் 1614-ம் ஆண்டிலேயே தனது Anatomy of Melancholy எனும் பாம்ப்லேட் மூலமாகக் கண்டித்து எழுதினார். ஸ்பெயின் நாட்டில் தான் அந்த ‘நியூஸ் லெட்டர்’, ‘நியூஸ் பாம்ப்லேட்'டுகளுக்குச் செய்திகள் தயாரிக்கப்பட்டு வந்தனவாம்.

ஆனால், 1622-ம் ஆண்டின் மே மாதம் வரை; அந்தச் செய்தித் தயாரிப்பு முறைகள் முதன் முதலாக வெளி வரவில்லை. அதற்குப் பிறகு, நத்தானியல் பட்டர், Nathaniel Butter நிகோலஸ் பெளர்னே, Nicholas Bourne, தாமஸ் அர்ச்சர் Thomas Archer என்பவர்கள் ஓரணியாக ஒன்றுகூடி ‘கொரண்டே’ ‘Corante’ என்ற ஒரு பத்திரிகைக்காக செய்திகளைத் தயாரித்தார்கள்.

அந்த அணியினர் தயாரித்த ‘Corante’ என்ற பருவ காலச் சுவடி, அந்த நூற்றாண்டு முழுவதும் மக்கள் இடையே பரவி கருத்து வளர்ச்சியையும், படிக்கும் உணர்ச்சியையும் தூண்டிவிடும் ஒரு சக்தியாக அமைந்தது.

இங்கிலாந்து நாட்டில் அப்போது உருவான அரசியல் நெருக்கடித் தொல்லைகளால், புதுப்புது Periodicals பருவ இதழ்கள், புற்றீசல்கள் போல தொடர்ந்து புறப்பட்டு வெளிவந்தன. இந்தப் பருவச் சுவடிகளில் பெரும்பான்மையான இதழ்கள் வாரம் மும்முறையாக வெளி வந்து மக்களிடையே பரபரப்பை யூட்டி படிக்கும் உணர்ச்சியை உருவாக்கின.