பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

47


உலகத்தின்
முதல் நாளேடு

வாரம் மும்முறை வெளிவரும் இந்த பருவச் சுவடிகள் குழுவிலிருந்து; 1703ம் ஆண்டில் ‘டெய்லி கொரண்ட்’ “Daily courant” என்ற முதல் தினசரி செய்தித்தாள் முதன் முதலாக வெளிவந்தது. இந்த நாளேடுதான் உலகத்தின், குறிப்பாக கிரேட் பிரிட்டனின் முதல் செய்தித்தாள் என்ற பெயரையும் புகழையும் பெற்று, மக்கள் இடையே தொண்டு செய்தது என்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

‘குயின் அன்னிஸ்’ என்பவர் காலத்தில் குறிப்பிடத்தக்க ஒரு திறமையாளர் குழுவினர், தங்களது அறிவுக் கொடைகளாகச் செய்திகளைச் சேகரித்து, மக்கள் அவர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டும் வகையில் பருவ காலச் சுவடிகளுக்காக அறிவுத் தொண்டு புரிந்து வந்தார்கள். அவர்களால் பருவ கால இலக்கியத் துறை வேகமாக வளர்ந்தது; முன்னேறியது.

அவர்களுள் குறிப்பாக டிஃபோ Defoe என்பவர்தான்; இங்லீஷ் மொழியிலேயே மிகப் பெரிய முதல் பத்திரிகையாளர் என்று இங்கிலாந்து மக்களால் போற்றப்பட்டவராவார். அவர் மட்டுமன்று, சற்றேறக்குறைய அதே ஆண்டுகள் இடையில் ஸ்டீலி, Steele ஸ்விப்ட், Swift அடிசன் Adoison என்பவர்களும் புகழ் பெற்ற பத்திரிகையாளர்களாக வளர்ந்திருந்தார்கள்.

அப்போது வெளிவந்துக் கொண்டிருந்த பத்திரிகைகளுக்கு உருவான அரசியல் முக்கியத்துவங்களால் அந்த இதழ்களின் விற்பனைகள் பெருகின. பிரதிகளும், அதிக அளவு அச்சடிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், அப்போதைய பிரிட்டிஷ் அரசு பத்திரிகைகளுக்காக வழங்கிய அஞ்சல் போக்கு-வரத்து வரியைக் குறைத்துக் கொள்ளாமல், அதிக வரிகளையே பத்திரிகைகள் மேல் வசூலித்தது.

அரசு உதவிப் பொருட்களை வழங்கும் அனுமதியைப் பெற்ற பத்திரிகையை நடத்தி வந்த பலருள் ஒருவரான வால்போல் Walpole என்பவர், ஆண்டுக்கு ஐயாயிரம்