பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்


பெற்றக் கவிஞர்கள், கல்விமான்கள் அனைவரும் அவரைப் பாராட்டிப் போற்றினார்கள். தாகூரின் புகழ் உலகெலாம் பரவியதால் அவர் உலகப் பெருங்கவிஞர்களுள் ஒருவராக மதிக்கப்பட்டார்.

‘கீதாஞ்சலி’யின் கவிதைப் புலமை எங்களைப் பெரிதும் ஈர்த்து விட்டது என்று கூறி, நோபல் நிறுவனம் 1913ம் ஆண்டில் தாகூருக்கு நோபல் பரிசை வழங்கிப் பாராட்டியது.

இலண்டனிலுள்ள ‘கவிதை’ என்ற பத்திரிகை தாகூர் கவிதையை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியதால், பத்திரிகைத் தொண்டு ஒருவரை எந்த அளவு வானுயரத்திற்கு உயர்த்தி விட்டது பார்த்தீர்களா? இதுதான் பத்திரிகையின் அறிவறம் - இல்லையா?

‘டைம்ஸ் பத்திரிகையாளர்
அனதோல் ஃபிரான்ஸ்:

பிரெஞ்சு நாட்டின் புகழ் வாய்ந்த எழுத்தாளர்களில் ஒருவரான அனதோல் ஃபிரான்ஸ் ஒரு புத்தக வியாபாரியின் மகன். அவர் The Times என்ற செய்தித்தாளில் 1886ம் ஆண்டு முதல் 1893ம் ஆண்டுவரை இலக்கிய விமர்சகராகப் பணியாற்றியவர்.

ஃபிரான்ஸ்; 1881ம் ஆண்டில் ‘லா கிரைம் டி இல்வஸ்டர் போனார்டு’ (The crime of Sylvester Bonnard) என்ற நாவலை எழுதினார். அந்த நாவல் ‘டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த போது, பிரெஞ்சு மக்கள் அவரை பலப்பட பாராட்டினார்கள். அதனால் பத்திரிகை பரப்பரப்பாக விற்பனையானது.

அனதோல் ஃபிரான்ஸ் எண்ணற்ற நாடகங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதியிருந்தாலும், அவற்றுள் 1900ம் ஆண்டின் எழுதப்பட்ட ‘Monsieur Bergert of Paris’ என்ற வரலாற்று நாவல் உலகப் புகழ் பெற்றதாகும்.

ஒரு யூத இன தளபதியான ஆல்பிரட் டிரைபஸ் மீது தொடரப்பட்ட பொய் வழக்கைக் கருவாக வைத்து, ஒரு