பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்


 சீன பெண் பத்திரிகையாளர்
பெரல் எஸ். பக்!

அமெரிக்கா மண்ணில் பிறந்த பெரல் எஸ். பக் என்ற உலகப் புகழ் பெற்ற பெண் எழுத்தாளி, சீன நாட்டில் உள்ள நான்கிங் நகர் கல்லூரியில் பேராசிரியையாய் பணியாற்றினார்.

அப்போது விவசாயத் துறை பேராசிரியராய் இருந்த ஜான் லாசிங் பக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு பெற்றோரிட்ட பெயரான பெரல் சைடன்ஸ்ட்ரிக்கர் என்ற தனது பெயருடன் கணவர் பெயரான ‘பக்’ என்ற சொல்லையும் இணைத்துக் கொண்டு இறுதி வரை பெரல் எஸ்.பக் எனும் பெயருடனேயே உலகம் போற்ற வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.

பெரல் எஸ். பக், சீனாவிலே உள்ள ‘ஷாங்காய் மெர்குரி’ என்ற இங்லீஷ் செய்திப் பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதும் பத்திரிகையாளராகப் பணி புரிந்தார். தனது தாயாரின் சீன வாழ்க்கையைச் சுவைப்பட அதில் எழுதியதால் சீனர்கள் இடையே அவரது பெயர் புகழ் பெற்று விட்டது.

‘அட்லாண்டிக் மன்த்லி’ என்ற மாதப் பத்திரிகையில் கதைகள், நாவல்கள் எழுதியதாலும், அத்துடன் சில அமெரிக்கப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்ததாலும், பர்க் எழுத்துக்கள் உலகெங்கும் அவரது புகழைப் பரப்பியது.

அவருடைய கப்பல் பயணங்களை ஒரு நாவலாக எழுதி அதற்கு ‘ஈஸ்டு விண்டு’, East Wind ‘வெஸ்ட் விண்டு’, West Wind, என்று பர்க் பெயரிட்டார். 1931ல் ‘நல்ல பூமி’, Good Earth என்ற நாவலை எழுதினார். அதற்கு அமெரிக்க புலிட்சர் பரிசு கிடைத்தது. இந்த நூல் உலகெங்கும் நல்ல விற்பனையை வழங்கியது.

1938-ஆம் ஆண்டில் நோபல் பரிசு நிறுவனம் பர்க் எழுதிய 80 இலக்கியப் படைப்புகளையும் பாராட்டி பரிசு கொடுத்தது. பெரல் எஸ். பர்க் என்ற அமெரிக்கப் பெண்தான் முதன் முதலாக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் பரிசாளி